عن سهل بن سعد رضي الله عنهما مرفوعاً: «ثنتان لا تُرَدَّانِ، أو قلما تردان: الدعاء عند النداء وعند البأس حِينَ يُلْحِمُ بَعْضُهُ بَعْضًا».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...
இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை.அல்லது அவை அரிதாக நிராகரிக்கப்படுகின்றன.அவையாவன அதான் சொல்லும் போது கேட்கும் துஆவும்,யுத்தத்தில் சிலர் சிலரோடு மோதிக் கொள்ளும் போது கேட்கும் துஆவுமாகும்.என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]
ஒரு முஜாஹித்-போராளி யுத்தகளத்தில் இருந்து கொண்டுகேட்கும் துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.என,அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதின் சிறப்பை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.மேலும் அதானும்,இகாமத்தும் சொல்லும் போது ஒரு முஸ்லிம் கேட்கும் துஆவையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்,என அதானின் சிறப்பையும் இந்த ஹதீஸ் தெளிவுபடத்துகிறது.