عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلَّا كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ، وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ، ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ، وَيَفْعَلُونَ مَا لَا يُؤْمَرُونَ، فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ، وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الْإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 50]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில சீடர்களும், தோழர்களும் இருந்திருப்பர். அவர்கள் அந்த நபியின் வழிமுறையைப் பற்றிப் பிடிப்பர். அவரது கட்டளையைப் பின்பற்றுவர். அவர்களுக்குப் பின்னர் சில வழித்தோன்றல்கள் வருவர். செய்யாதவற்றைக் கூறுவார்கள். ஏவப்படாதவற்றைக் செய்வார்கள். யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 50]
இங்கு நபியவர்கள், தனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அச்சமுதாயத்தில் அவருக்கென்று, தூய்மையானவர்களும், உதவியாளர்களும், உளத்தூய்மையுடன் போராடுபவர்களும் இருப்பார்கள் என்றும், அந்த நபிக்குப் பின்னர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்குத் தகுதியானவர்களாகவும், நபியுடைய வழிமுறையை எடுத்து நடந்து, அவரது கட்டளைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள் என்றும், பின்பு அந்த நன்மக்களுக்குப் பின்னர் வரும் சிலர் எந்த நலவுமற்றவர்களாக இருப்பதோடு, அவர்கள் செய்யாததைக் கூறிக்கொண்டும், ஏவப்படாததைச் செய்துகொண்டும் இருப்பார்கள் என்றும் கூறிவிட்டு, யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.