عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي، ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي، ثُمَّ قَالَ لِي: «يَا حَكِيمُ، إِنَّ هَذَا المَالَ خَضِرٌ حُلْوٌ، فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ، بُورِكَ لَهُ فِيهِ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ، وَكَانَ كَالَّذِي يَأْكُلُ وَلاَ يَشْبَعُ، وَاليَدُ العُلْيَا خَيْرٌ مِنَ اليَدِ السُّفْلَى»، قَالَ حَكِيمٌ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا، فَكَانَ أَبُو بَكْرٍ يَدْعُو حَكِيمًا لِيُعْطِيَهُ العَطَاءَ، فَيَأْبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا، ثُمَّ إِنَّ عُمَرَ دَعَاهُ لِيُعْطِيَهُ، فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ، فَقَالَ: يَا مَعْشَرَ المُسْلِمِينَ، إِنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ الَّذِي قَسَمَ اللَّهُ لَهُ مِنْ هَذَا الفَيْءِ، فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ. فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تُوُفِّيَ رَحِمَهُ اللَّهُ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2750]
المزيــد ...
ஹகீம் இப்னு ஹிதாம் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பின்பு மீண்டும் கேட்டேன். மீண்டும் கொடுத்தார்கள். பின்பு மீண்டும் கேட்டேன். மீண்டும் கொடுத்தார்கள். பின்பு அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "'ஹகீமே! இந்த சொத்துக்கள் பசுமையானவை, இனிமையானவை. யார் அதனை தயாள குணத்துடன் எடுக்கின்றாரோ, அவருக்கு அதில் பரக்கத் செய்யப்படும். யார் அதனைப் பேராசையுடன் எடுக்கின்றாரோ, அதில் அவருக்கு பரகத் செய்யப்படமாட்டாது. அவர், சாப்பிட்டும் வயிறு நிரம்பாத ஒருவரைப் போன்றாகிவிடுவார். மேலுள்ள கை, கீழுள்ள கையை விடச் சிறந்ததாகும். ஹகீம் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்போது நான் நபியவர்களிடம், 'அல்லாஹ்வுயை தூதரே! உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களுக்குப் பின்னர், நான் இவ்வுலகைப் பிரிந்துசெல்லும் வரை, யாரிடமும் கேட்கமாட்டேன்.' என்று கூறினேன். பின்னர் அபூ பக்ர் (ரலி) அவர்கள் அவருக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்த போதிலும், ஏற்க மறுத்துவிட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அவருக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்த போதிலும், ஏற்க மறுத்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : 'முஸ்லிம்களே! நிச்சயமாக நான், அல்லாஹ் இந்த போர்ச்செல்வங்களில் இருந்து அவருக்கு பங்குவைத்துள்ளதைப் பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் கூறிய போதிலும் அவர் அதை எடுக்க மறுக்கின்றார்.' ஹகீம் அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர், அவர் மரணிக்கும் வரை மனிதர்களிடம் இருந்து எதையும் கேட்கவில்லை.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 2750]
ஹகீம் பின் ஹிதாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உலக சொத்துக்களில் இருந்து தருமாறு கேட்டபோது அவர்கள் கொடுத்தார்கள். அவர்கள் மீண்டும் கேட்க, மீண்டும் கொடுத்தார்கள். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ஹகீமே! இந்த சொத்துக்கள் விருப்பத்தையும், பேராசையையும் ஊட்டக்கூடியது. யாருக்கு அது கேட்காமல் கிடைத்து, பேராசையும், வலிந்து கேட்டலும் இன்றி அவர் அதை எடுத்துக்கொள்கின்றாரோ, அதில் அவருக்கு பரகத் செய்யப்படும். யார் அதனை பேராசையுடனும், பெருவிருப்பத்துடனும் எடுத்துக்கொள்கின்றாரோ, அவருக்கு அதில் பரகத் செய்யப்படமாட்டாது. அவர் சாப்பிட்டும், வயிறுநிரம்பாத ஒருவரைப் போன்று மாறிவிடுவார். செலவழிக்கும், மேலுள்ள கை, யாசிக்கும், கீழுள்ள கையை விட அல்லாஹ்விடத்தில் சிறந்ததாகும். ஹகீம் அவர்கள் கூறுகின்றார்கள்: நான், 'அல்லாஹ்வுரைடய தூதரே! உங்களுக்குப் பின்னர், நான் உலகை விட்டும் பிரியும் வரை, யாரிடமும் சொத்துக்களைக் குறைக்கும் விதமாக. அவர்களிடம் கேட்கமாட்டேன்.' என்று கூறினேன். பின்னர், நபி (ஸல்) அவர்களது கலீபா, அபூ பக்ர் (ரலி) அவர்கள் அவருக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்த போதிலும், அவர்களிடமிருந்து எதையும் ஏற்க மறுத்துவிட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அவருக்குக் கொடுப்பதற்காக அவரை அழைத்த போதிலும், ஏற்க மறுத்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: முஸ்லிம்களே! முஸ்லிம்கள் நிராகரிப்பாளர்களிடமிருந்து, போரோ, ஜிஹாதோ இன்றிப் பெற்றுக்கொண்ட செல்வங்களில் இருந்து அல்லாஹ் ஹகீமுக்குப் பங்குவைத்துள்ள, அவரது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றேன். அவரோ அதை எடுக்க மறுக்கின்றார்." எனவே ஹகீம் அவர்கள், நபியவர்களுக்குப் பின்னர் உலகை விட்டும் பிரியும் வரை, யாரிடமும் சொத்துக்களைக் குறைக்கும் விதமாக. அவர்களிடம் எதையும் கேட்கவில்லை.'