عن أبي موسى رضي الله عنه قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم فِي غَزَاة ونحن سِتَّةُ نَفَرٍ بَيننا بعيرٌ نَعْتَقِبُهُ، فَنَقِبَتْ أقدامُنا وَنَقِبَت قَدَمِي، وسَقطت أَظْفَارِي، فكنَّا نَلُفُّ على أَرْجُلِنَا الْخِرَقَ ، فَسُمِّيَت غَزْوَة ذَاتُ الرِّقَاع لما كنَّا نَعْصِب على أرجُلنا من الخِرق، قال أبو بردة: فحدث أبو موسى بهذا الحديث، ثم كره ذلك، وقال: ما كنت أصنع بأن أَذْكُرَه! قال: كأنه كره أن يكون شيئا من عمله أفْشَاه.
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"நாம் ஒரு போருக்காக(ரஸுல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம்.அவ்வமயம் நாம் ஆறு பேர்கள் இருந்தோம்.எம்மிடம் ஒரு ஒட்டகம்தான் இருந்தது.அதன் பின்னால் நாம் சென்று கொண்டிருந்தோம்.அவ்வமயம் நமது பாதங்களில் காயம் ஏற்பட்டன.எனது பாதமும் காய்ப்பட்டது.மேலும் எனது நகங்கள் கழன்று விழுந்தன.நாம் அனைவரும் நமது காலில் சீலைத் துண்டுகளைக் கட்டிக் கொண்டோம் இவ்வாறு சீலைத் துண்டுகளைக் கொண்டு நமது பாதங்களில் நாம் கட்டுப் போட்டுக் கொண்டதன் காரணமாக இது "ஒட்டுகள் உடைய யுத்தம்"என்று பெயர் பெற்றது என்று "அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் இந்த சம்வத்தை அறிவித்துக் கொண்டிருந்த அபூ மூஸா அவர்கள் பின்னர் அதனைச் சொல்வதை விரும்பவில்லை.எனவே"இதனனைச் சொல்லிக் காட்டுவதற்காக நான் இப்டிச் செய்யவில்லை" என்றார்கள், இது அவர்கள் தங்களின் இப்படியான செய்தி யொன்றைப் பகிரங்கப்படுத்த விரும்ப வில்லை என்பதை எடுத்துக் காட்டுவது போல் இருந்தது,என அபூ புர்தா (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

ஹதீஸ் விளக்கம்:அபூ மூஸா (ரழி) அவர்கள் ஒரு போரில் கலந்து கொள்வதற்காக ரஸூல் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.அப்பொழுது அவருடன் அவரின் சில தோழர்களும் இருந்தனர்.அவர்களின் எண்ணிக்கை ஆறு பேர்கள்.அவ்வமயம் அவர்களிடம் ஒரு ஒட்டகம்தான் இருந்தது.அதன் மீது ஒரு குறிப்பட்ட தூரம் வரை ஒருவர் ஏறிச் செல்ல மற்றவர்கள் அதன் பின்னால் நடந்து சென்றனர்.அவரின் வாய்ப்பு நிறைவு பெற்றதும் அவர் அதிலிருந்து இறங்கி விடுவார்.அதன் பின்னர் மற்றவர் அதில் ஏறி சாவாரி செய்வார்.இவ்வாறு அவர்கள் தங்களின் இலக்கை அடையும் வரையில் சுலட்சி முறையில் அதில் சவாரி செய்தனர்.அப்போது தங்களின் பாதங்கள் கீறிக் கிழிந்து அதில் காயம் ஏற்படா வண்ணம் தங்களின் பாதங்களை மறைத்துக் கொள்வதற்கு அவர்களிடம் வஸ்திரம் எதுவும் இருக்கவில்லை.எனவே அவர்கள் வெற்றுக் காலுடனேயே நடந்து சென்றனர்.இப்படி பாலை வனத்தில் நீண்ட தூரம் நடந்து சென்றதன் காரமாக அவர்களின் பாதங்கள் காயங்களுக்கு இலக்காகின.இதனையே "அவ்வமயம் நமது பாதங்களில் காயம் ஏற்பட்டன.எனது பாதமும் காய்ப்பட்டது.மேலும் எனது நகங்கள் கழன்று விழுந்தன" என்று அபூ மூஸா (ரழி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.இத்தனை பெரிய இடுக்கண் இவர்களுக்கு ஏற்பட்டு விட்ட போதிலும் அவர்கள் தங்களின் நடையை நிறுத்திக் கொள்ளாது எதிரிகளைச் சந்திக்கும் வரையில் தங்களின் பயணத்தை மேற்கொண்டனர்.மேலும் "நாம் அனைவரும் நமது காலில்சீலைத் துண்டுகளைக் கட்டிக் கொண்டோம்" என்று அவர்கள் குறிப்பிட்டிருப்பதிலிருந்து திடமான கரடு முரடான பூமியில் நீன்ட தூரம் அவர்கள் நடந்து சென்றதன் காரமாக அவர்களின் பாதணிகள் அறுந்து விட்டன,எனவே அவர்கள் முரட்டுப் பூமியிலிருந்தும்,அதன் வெப்பத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வண்ணம் தங்களின் பாதங்களில் சீலைத் துண்டுகளைக் கட்டிக் கொண்டனர் என்பது துலாம்பரமாகின்றது.எனவேதான் இந்த யுத்தம் "ذات الرقاع" ஒட்டுகள் உடைய யுத்தம் என பெயர் பெற்றது.இதுபற்றி அபூ மூஸா (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது "இவ்வாறு நாம் சீலைத் துண்டுகளைக் கொண்டு நமது பாதங்களில் கட்டுப் போட்டுக் கொண்டதன் காரணமாக இது "ஒட்டுகள் உடைய யுத்தம்"என்று பெயர் பெற்றது என்று கூறினார்கள்.அதாவது இந்த நிகழ்வுின் காரணமாக ரஸூல் (ஸல்) அவர்கள் பங்குபற்றிய இந்த யுத்தம் غزوة ذات الرقاع ஒட்டுகள் உடைய யுத்தம் என பெயர் பெற்றது.இந்த யுத்தம் இப்படி பெயர் பெறுவதற்கு இதுவோர் அடிப்டைக் காரணமாகும்.மேலும் இது பற்றி அபூ புர்தா அவர்கள் கூறும் போது இந்த சம்வம் பற்றி விவரித்த அபூ மூஸா (ரழி) அவர்கள் "இதனனைச் சொல்லிக் காட்டுவதற்காக நான் இப்டிச் செய்யவில்லை" என்று கூறினார்ள்.அதாவது தாங்கள் செய்த நல்ல காரியம் ஒன்றை அபூ மூஸா (ரழி) அவர்கள் பகிரங்கப்படுத்த விரும்ப வில்லை என்பதை அவர்களின் இந்த வாசகம் புலப்படுத்துகின்றது என்று கூறினார்கள்.மேலும் பின்பற்றத் தகுதிவாய்ந்த ஒரு நல்லவர் தான் செய்யும் நல்ல கருமத்தைப் போன்று மற்றவரும் செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில் அதனை பிரரிடம் சொல்லிக் காட்டுவதைத் தவிர பொதுவாக தான் செய்யும் நல்ல கருமத்தைப் பகிரங்கப்படுத்தாமல் அதனனை மறைத்து வைப்பதே சிறந்தது.ஏனெனில் அதில்தான் உளத்தூய்மை இருக்கின்றது.எனவேதான் தங்களுக்கு நேர்ந்த இந்த சம்பவத்தைப் பற்றி எடுத்துக் கூறிய அபூ மூஸா (ரழி) அவர்கள் பின்னர் இதனைத் தான் கூறியிருக்கக் கூடாது என்று நினைத்தார்கள்,என்பதே இந்த ஹதீஸ் தரும் கருத்தாகும்.மேலும் "அவர் தன் வலது கரம் தர்மம் செய்ததைத் தன் இடது கரம் அறியாத வாறு மறைத்துக் கொண்ண்டார்" என்று பிரிதொரு ஹதீஸில் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு கவணிக்கத் தக்கதாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி ஹவுஸா
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு