عَنْ صُهَيْبٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ، قَالَ: يَقُولُ اللهُ تَبَارَكَ وَتَعَالَى: تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ؟ فَيَقُولُونَ: أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا؟ أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ، وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ قَالَ: فَيَكْشِفُ الْحِجَابَ، فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 181]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின் அல்லாஹ் தஆலா, 'நான் உங்களுக்கு மேலதிகமாக ஒரு விடயத்தைத் தருவதை விரும்புகின்றீர்களா?' என்று கேட்பான். அப்போது அவர்கள், 'நீ எங்களது முகங்களை பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவர்களுக்கு அல்லாஹ்வைப் பார்ப்பதை விட, விருப்பமான வேறொன்றும் வழங்கப்பட்டிருக்கமாட்டாது.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 181]
சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்துவிட்டால், அல்லாஹ் பின்வருமாறு கூறுவதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் உங்களுக்கு ஏதாவது அதிகமாகத் தருவதை விரும்புகின்றீர்களா?
அப்போது சுவனவாதிகள் அனைவரும், 'நீ எங்கள் முகங்களைப் பிரகாசமாக்கவில்லையா? எங்களை நரகில் இருந்து பாதுகாத்து, சுவனத்தில் நுழையச் செய்யவில்லையா?' என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். அவனது திரை ஒளியாகும். சுவனவாதிகளுக்கு தமது ரப்பைப் பார்ப்பதை விட வேறு விருப்பமான ஒன்றுமே வழங்கப்பட்டிருக்கமாட்டாது.