عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: يَا ابْنَ آدَمَ إِنَّكَ مَا دَعَوْتَنِي وَرَجَوْتَنِي غَفَرْتُ لَكَ عَلَى مَا كَانَ فِيكَ وَلاَ أُبَالِي، يَا ابْنَ آدَمَ لَوْ بَلَغَتْ ذُنُوبُكَ عَنَانَ السَّمَاءِ ثُمَّ اسْتَغْفَرْتَنِي غَفَرْتُ لَكَ، وَلاَ أُبَالِي، يَا ابْنَ آدَمَ إِنَّكَ لَوْ أَتَيْتَنِي بِقُرَابِ الأَرْضِ خَطَايَا ثُمَّ لَقِيتَنِي لاَ تُشْرِكُ بِي شَيْئًا لأَتَيْتُكَ بِقُرَابِهَا مَغْفِرَةً».
[حسن] - [رواه الترمذي] - [سنن الترمذي: 3540]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் கூறுவதை தான் கேட்டதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்; : 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம் நீ செய்தவற்றை பொருட்படுத்தாது அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன். ஆதமின் மகனே, உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் பின், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கோருவாயானால், நீ செய்தவற்றை பொருட்படுத்தாது நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். ஆதமின் மகனே, நீ பூமியை நிறைத்திடும் அளவிற்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னை சந்தித்தால் அதே அளவுக்கு பாவமன்னிப்பை உனக்கு வழங்குவேன் .
[ஹஸனானது-சிறந்தது] - [இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [سنن الترمذي - 3540]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்; ஆதமின் மகனே : நம்பிக்கை இழக்காது நீ என்னிடம் பிரார்த்தித்து எனது கருணையை எதிர்பார்த்திருக்கும் காலமெல்லாம் உனது பாவத்தை எவ்விதப்பொருட்படுத்தலுமின்றி மன்னிப்பேன் அந்தப் பாவம் அல்லது குற்றம் பெரும்பாவங்களில் ஒனறாக இருப்பினும் சரியே. ஆதமின் மகனே! உனது பாவம் வானம் பூமி நிறையும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு அதற்காக என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அதன் அதிகத்தை பொருட்படுத்தாது உமது எல்லா பாவத்தையும் மன்னிப்பேன்.
ஆதமின் மகனே! நீ எதையும் இணைவைக்காத நிலையில் ஏகத்துவவாதியாக வாழ்ந்து, மரணித்த பின் இந்தப் பூமி நிறைய பாவங்களுடன் தவறுகளுடனும் வந்தாலும் உமது பாவங்களுக்கும் தவறுகளுக்கும் நிகராக இப்பூமி நிறைய மன்னிப்பை வழங்குவேன். ஏனெனில் நான் மன்னிப்பு வழங்குவதில் தயாளன். நான் இணைவைப்பைத் தவிர அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறேன்.