عَنْ عَائِشَةَ أُمِّ المؤْمنينَ رَضيَ اللهُ عنها قَالَت:
قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَسْبُكَ مِنْ صَفِيَّةَ كَذَا وَكَذَا، -قَالَ أَحدُ الرُّوَاةِ: تَعْنِي قَصِيرَةً- فَقَالَ: «لَقَدْ قُلْتِ كَلِمَةً لَوْ مُزِجَتْ بِمَاءِ الْبَحْرِ لَمَزَجَتْهُ» قَالَتْ: وَحَكَيْتُ لَهُ إِنْسَانًا، فَقَالَ: «مَا أُحِبُّ أَنِّي حَكَيْتُ إِنْسَانًا وَأَنَّ لِي كَذَا وَكَذَا».
[صحيح] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن أبي داود: 4875]
المزيــد ...
விசுவாசிகளின் தாயார், ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களிடம், 'ஸபிய்யா இவ்வாறு இருப்பதே உமக்குப் போதும்' (அறிவிப்பாளர்களில் ஒருவர், ஆஇஷா அவர்கள் அவர் குள்ளமானவராக இருப்பதை நாடியதாகக் கூறுகின்றார்) என்று கூறினேன். அப்போது நபியவர்கள், "நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்துவிட்டால் அதுவும் நாற்றமடைந்துவிடும்" என்று கூறினார்கள். நான் ஒரு மனிதரைப் பற்றி அவர்களிடம் செய்து காட்டினேன். அப்போது நபியவர்கள், 'நான் எந்த மனிதனையும் பற்றி அவ்வாறு பேச விரும்புவதில்லை. அதற்காக, எவ்வளவு வழங்கப் பட்டாலும் சரியே' என்று கூறினார்கள்.
[சரியானது] - [இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் அபூ தாவூத் - 4875]
ஆஇஷா (ரலி) அவர்கள் நபியவர்களிடம், 'உம்முல் முஃமினீன் ஸபிய்யாவிடம் உள்ள உடல் குறைகளில், அவர் குள்ளமானவராக இருப்பதே போதும்' என்று கூறுகின்றார்கள். அப்போது நபியவர்கள், "நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்துவிட்டால் அதுவும் நாற்றமடைந்து விடும்" என்று கூறினார்கள். மேலும், ஒரு மனிதரை ஏளனப்படுத்தும் விதமாக, அவர் செய்வது போன்ற ஒன்றை செய்து காட்டினேன். அப்போது நபியவர்கள், ஏளனப் படுத்தும் விதமாக, அவ்வாறு அவரது குறைகளைப் பேசுவதையோ, அவரைப் போன்று செய்து காட்டுவதையோ, அவர் பேசுவது போன்று பேசிக் காட்டுவதையோ நான் விரும்புவதில்லை. அதற்காக உலக ஆதாயங்கள் நிறைய வழங்கப்பட்டாலும் சரியே! என்றும் கூறினார்கள்.