+ -

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2581]
المزيــد ...

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் 'திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்' என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக் கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அநியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப் பட்டவனுக்கு அநியாயம் இழைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இழைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2581]

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை தம் தோழர்களிடம், 'வங்குரோத்துக்காரன்; யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நம்மில் செல்வமோ சேமிப்புகளோ இல்லாதவர்கள் வங்குரோத்துக்காரர்களாக கருதப்படுகிறார்கள்' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் (திவாலானவர்) என்பவர், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற பல நல்ல செயல்களுடன் வருபவர் ஆவார்.' ஆனால் அவர் பலரை கெட்ட வார்த்தைகளால் அவதூறாகவும், அவமதித்தும் பேசியிருப்பார்;.பிறருடைய மானத்தை பங்கப் படுத்தியிருப்பார், பிறருடைய செல்வத்தை விழுங்கி அவர்களின் உரிமைகளை மறுத்திருப்பார், பிறருடைய இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்கு எதிராக அநீதி இழைத்திருப்பார், ஒருவரை அடித்து அவமானப்படுத்தியிருப்பார். இவ்வாறான ஒருவரின் நன்மைகள் அநீதிக்கு உள்ளானோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் பிறரின் உரிமை மீறலுக்கும் அநீதங்களுக்களுக்கான பிரதீயிடுகளும் நிறைவேற்றப்படும் முன்னர் அவரின் நன்மைகள் (நற்காரியங்ள்) முடிந்து விட்டால் அநீதிக்குட்பட்டோரின் தீமைகள் யாவும் அவரின் மீது சுமத்தப்பட்டு அநியாயக்காரர்களின் ஏட்டில் பதியப்பட்டு எந்த நன்மையுமில்லாதவராக பின்னர் அவர் நரகத்தில் தள்ளப்படுவார்.'

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தடுக்கப்பட்ட செயல்களை செய்வது கண்டிக்கப் பற்றிருத்தல். குறிப்பாக மக்களின் உடமைகள் மற்றும் மானுசீகமான உரிமைகள் தொடர்பான விடயங்களில் மிக அவதானமாக இருத்தல்.
  2. அடியார்களுக்கிடையிலான உரிமைகள் பேசித்தீர்த்தல் விட்டுக்கொடுத்தல் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஆனால் ஷிர்க் தவிர, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியானுக்கும் இடையிலான கடமைகள் தொடர்பான விஷயங்களில் மன்னித்தல் என்பதே அடிப்படையாகும்.
  3. குறிப்பாக பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தொடர்பான விவகாரங்களில் உரையாடலின் போது, கேட்பவரின் கவனத்தை ஈர்த்தல் மற்றும் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  4. உண்மையில் வங்குரோத்துக்காரர் (திவாலானவர்) யார் என்பதற்கான விளக்கம் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையான வங்குரோத்து நிலை என்பது, ஒருவரால் அநீதிக்கு ஆளானவர்கள், மறுமை நாளில் தங்களுக்கு அநீதி இழைத்தோரின் நற்செயல்களை பெறுவதாகும்.
  5. மறுமை நாளில்,படைப்புகளுக்கு இடையேயான பழிவாங்கலின் போது, சிலரின் அனைத்து நன்மைகளும் பறிக்கப்படும்,இறுதியில், அவனிடம் எந்த நன்மையும் இல்லாத ஒரு நிலையை அவன் அடையக்கூடும்.
  6. அல்லாஹ் தனது படைப்புகளை கையாள்வது நீதி மற்றும் உண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு