عن أسامة بن زيد رضي الله عنهما قال: رُفع إلى رسول الله - صلى الله عليه وسلم - ابن ابنته وهو في الموت، ففاضت عينا رسول الله صلى الله عليه وسلم فقال له سعد: ما هذا يا رسول الله؟! قال: «هذه رحمة جعلها الله تعالى في قلوب عباده، وإنما يرحم الله من عباده الرحماء».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...
உஸாமா இப்னு ஸைத் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல் அவர்களின் மகளின் மகனை (பேரனை) அவர் மரணத்தருவாயில் இருக்கும் வேளையில் அவருக்கு காட்டப்பட்டது.உடனே நபி (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அப்போது ஸஃத் ரழி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இது என்ன எனக் கேட்க இதுதான் அல்லாஹ் அடியாயர்களின் உள்ளங்களில் ஏற்படுத்தி வைத்துள்ள பாசம். அடியார்களில் இரக்கம் காட்டுபவர்களுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டுவான்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]
நபிஸல்அவர்களின் அன்புக்குரியர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் உஸாமா இப்னு ஸைத் அவர்களின் செய்தியில் அவர் குறிப்பிடும் போது நபி ஸல் அவர்களின் மகள்களில் ஒருவரின் மகன் மரணத்தருவாயில் இருக்கையில் நபியவர்களை வருமாறு வேண்டி ஒரு தூதுவரை அனுப்பி வைத்தார்கள். இந்த செய்தி நபியவர்களுக்கு கிடைத்ததும் இச்செய்தியை கூற வந்தவரிடம் அவளுக்கு பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர்பார்க்குமாறு சொல்லிவிடும் என்றும் கிடைத்தவைகள்,கொடுத்தவைகள் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்றும் கூறுவதுடன் அனைத்து விடயங்களும் தவணை நிர்ணயிக்கப்பட்டதாக உள்ளது என்றும் சொல்லிவிடு எனக்குறிப்பட்டார்கள் இந்த வாசகத்தை அக்குழந்தையின் தாய்க்கு கூறுமாறு கட்டளையிட்டார்கள். தனது மகள் அனுப்பிய அம்மனிதரிடத்தில் அக்குழந்தையின் தாயிடம் இதனை கூறுமாறு ஏவினார்கள் (இன்னாலில்லாஹி மா அகத வலஹு மா அஃதா) என்பது மிகப்பெரும் வார்த்தையாகும்.அனைத்து விவகாரங்களும் அல்லாஹ்வுக்குச்சொந்தமானதாக இருந்து அதிலிருந்து ஒன்றை உன்னிடம் இருந்து அல்லாஹ் எடுத்துக்கொண்டாலும்,கொடுத்தாலும் அவனின் அதிகாரத்திற்குட்பட்டதாகும். ஆகவே அவன் அதிகாரம் உரிமை பெற்ற ஒன்றை எடுக்கும்போது எந்த வகையில் ஒரு அடியான் கோபமும் வெறுப்பும் கொள்ள முடியும்? இதற்காகத்தான் மனிதனுக்கு சோதனை ஏற்படும் போது"இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று கூறுவது நபி வழியாகும் (சுன்னாவாகும்) அதாவது நாம் அல்லாஹ்வுக்குச்சொந்தமானவர்கள் எங்களை அவன் நாடிய விதத்தில் வழி நடாத்துபவன்.அதே போல் நாம் விரும்பியவற்றை எங்களுக்கு முன்பே எடுத்துவிடுவான். எனவே எடுத்தவையும் அவன் கொடுத்வையும் அவனுக்கே உரியன.உனக்குத் தரப்பட்டவை உனக்கு சொந்தமானவை அல்ல,அவை அல்லாஹ்வுக்குரியது.இதனால் அல்லாஹ் நமக்களித்தவற்றை நமக்கு விரும்பிய முறையில் கையாள முடியாது, அவன் அனுமதியளித்தவற்றில் மாத்திரம் தான் அது முடியும். இவற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில் எங்களின் உரிமை என்பது அல்லாஹ் எமக்களித்ததினால் கிடைத்த உரிமையாகும் என்பதே. அஜலுன் முஸம்மா எல்லாவற்றுக்ம் குறிப்பிட்ட தவணை உள்ளது எனும் நபியவர்களின் கூற்றை நீ உறுதியாக விசுவாசம் கொண்டால் அல்லாஹ் தந்தவை,எடுத்தவை அவனுக்கே சொந்தமானது என்பதையும் அவற்றுக்கு குறிப்பிட்ட தவணை உண்டு என்பதையும் நீ ஏற்றுக்கொண்டு விட்டாய் என்பது பொருள் அத்துடன் மேற்படி வாசகமானது இறை விதியை மனிதனால் முற்படுத்தியோ பிற்படுத்தியோ மாற்றம் செய்ய முடியாது எனும் கருத்தையும் பிரதிபளிக்கிறது.இதுகுறித்துஅல்லாஹ் "ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணைக்காலம் இருக்கின்றது,அவர்களின் தவணைக் காலம் வந்து விட்டால் அவர்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள். இதனால் கோபம் கொள்வதிலோ அதிர்ச்சியும் ஏக்கமும் கொள்வதினாலோ எவ்விதப் பயனும் கிடையாது.அவைகளால் இறைவிதியை ஒரு போதும் மாற்ற முடியாது என்பதே உண்மையாகும், பின்னர் அத்தூதர் நபி (ஸல்) அவர்களின் மகளிடத்தில் அவர் கூறியதை தெரிவிக்க நபியவர்களின் மகள் நபியை வருமாறு வேண்டி தூதுவரை மீண்டும் அனுப்பி வைத்தார்,அதன் பின் நபியவர்கள் தனது தோழர்களுடன் அவ்விடத்தை அடைந்தார்கள். அப்போது அவரிடத்தில் குழந்தை கொடுக்கப்பட்டது.அந்நேரத்தில் அக்குழந்தையின் உயிர் மூச்சு சென்று கொண்டிருந்தது.இதனைப் பார்த்த நபியவர்கள் அழுது விட்டார்கள்,அவரின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டடியது. உடனே ஸஃத் இப்னு உபாதவும் (கஸ்ரஜ் கோத்திரத்தின் தலைவர்) அவருடன் இருந்தவர்களும் நபியவர்கள் அதிர்ச்சியால் அழுது விட்டார்கள் என நினைத்து இதென்ன காரியம்?எனக் கேட்க இந்தக் குழந்தையின் மீதிருந்த இரக்கத்தால் அழுதேனே தவிர இறைவிதியில் அதிர்ச்சியுற்று அழவில்லை என்றார்கள். அதனைத் தொடர்ந்து இரக்கமுள்ளவர்களுக்கு தான்அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான் என்றார்கள். இந்த ஹதீஸ் சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஒருவருடன் இருக்கும் பாசத்தினால் அவருக்காக அழ முடியும் என்பதற்கான ஆதாரமாக உள்ளது.