عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ:
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لاَ يَسْتَتِرُ مِنَ البَوْلِ، وَأَمَّا الآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ» ثُمَّ أَخَذَ جَرِيدَةً رَطْبَةً، فَشَقَّهَا نِصْفَيْنِ، فَغَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: «لَعَلَّهُ يُخَفِّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 218]
المزيــد ...
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 218]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளுக்குப் பக்கமாக சென்றபோது அவர்கள்: இந்த இரண்டு கப்ருகளிலும் அடக்கம் செய்யப்பட்வர்கள் உண்மையில் வேதனை செய்யப்படுகிறார்கள், அவர்கள் இருவருக்கமான வேதனை உங்களின் பார்வையில் மிகப்பெரிய விடயத்திற்காக அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமாகும். அவ்விருவரில் ஒருவர் இயற்கைத்தேவையை –சிறுநீர் கழிக்கையில் அச்சிறுநீர் தனது உடல் மற்றும் ஆடையில் படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதை பொருட்படுத்தாது இருந்தவர். மற்றொருவர், மக்களுக்கு மத்தியில் புறம் பேசித் திரிபவர். அதாவது, முரண்பாட்டையும் பிரச்சினையையும் மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பிறரின் பேச்சை பரப்பித் திரிபவர்.