عن ابن عمر رضي الله عنهما:
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 5921]
المزيــد ...
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 5921]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து இன்னொரு பகுதியை விட்டுவிடுவதை தடுத்தார்கள்.
இந்தத் தடையானது ஆண்களில் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பொதுவானது. பெண்களைப் பொருத்தவரை அவர்களின் முடியை மழிப்பது கூடாது.