+ -

عن معاوية رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «إنك إن اتَّبَعْتَ عَوْرَاتِ المسلمين أفْسَدْتَهُم، أو كِدْتَ أن تُفْسِدَهُم».
[صحيح] - [رواه أبو داود]
المزيــد ...

முஆவியா ரழியல்லஹு அன்ஹு அறிவிக்கிறார்கள், "நீ முஸ்லிம்களின் குறைகளை துருவி ஆராய்ந்தால் அவர்களை நீ நாசமாக்கிவிட்டாய், அல்லது நாசமாக்கிட முயற்சித்தவராவாய்" என நபி ஸல் அவர்கள் கூறுவதை நான் செவிமடுத்தேன்.
[ஸஹீஹானது-சரியானது] - [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

விளக்கம்

முஸ்லிம்களின் நிலமைகளை உளவு பார்த்து அவர்களின் குறைகளை தேடி யாரும் அறியாதிருந்த அவர்களின் இழிவான அருவருக்கத்தக்க விடயங்களை துருவி ஆராய்ந்து அவற்றை பகிரங்கப்படுத்துவது கூடாத செயலாகும். அவ்வாறு நீ செய்வதன் மூலம் அவர்களின் வெட்கம் குறைவடைந்து அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியாதிருந்த அந்தப்பாவங்களை அவர்கள் பகிரங்கமாக துணிவுடன் செய்வதற்கு அது வழிவகுக்கும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம்
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு