عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لاَ يَرْمِي رَجُلٌ رَجُلًا بِالفُسُوقِ، وَلاَ يَرْمِيهِ بِالكُفْرِ، إِلَّا ارْتَدَّتْ عَلَيْهِ، إِنْ لَمْ يَكُنْ صَاحِبُهُ كَذَلِكَ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6045]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூ தர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
யாராவது ஒரு மனிதன் இன்னுமொரு மனிதனைப் பார்த்து, 'பாவி' என்றோ, 'காபிர்' என்றோ கூறி, உண்மையில் அம்மனிதன் அவ்வாறில்லாவிட்டால், அத்தீர்ப்பு அவனுக்கே திரும்பி வந்துவிடும்.
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري - 6045]
இங்கு நபியவர்கள், யாராவது ஒருவர் இன்னொருவரைப் பார்த்து, 'நீ பாவி' அல்லது 'நீ காபிர்' என்று கூறி, உண்மையில் அவன் அவ்வாறில்லாவிட்டால், கூறப்பட்ட அப்பண்பிற்குத் தகுதியானவனாக அவனே இருப்பான் என்றும், அவனது வார்த்தை அவனை நோக்கியே திரும்பும் என்றும் எச்சரிக்கின்றார்கள். உண்மையில் அவன் அவ்வாறிருந்தால், அது இவருக்குத் திரும்பி வரமாட்டாது. ஏனெனில், அவன் கூறிய விடயம் உண்மையாகும்.