عَنْ جَابِرٍ رضي الله عنه قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ، وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2812]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் :
நிச்சயமாக ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான். ஆனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, பிளவை ஏற்படுத்துவதில் நம்பிக்கை இழக்கவில்லை.

[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 2812]

விளக்கம்

இங்கு நபி (ஸல்) அவர்கள், தொழுகையாளிகளான முஃமின்கள் அரபுத் தீபகற்பத்தில் மீண்டும் தன்னை வணங்கி, சிலைகளுக்கு ஸுஜூதை செய்வார்கள் என்பதில் ஷைத்தான் நிராசையடைந்து விட்டான் எனவும், எனினும், அவன் பேராசையுடனும், முஸ்லிம்களுக்கு மத்தியில் சச்சரவுகளையும், குழப்பங்களையும், குரோதங்களையும் ஏற்படுத்த முழு மூச்சாக செயற்படுகின்றான் எனவும் அறிவுறுத்துகின்றார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. சிலைகளை வணங்குவது சைத்தானை வணங்குவதாகும். ஏனெனில், அவனே அதை ஏவகின்றான். அதன்பால் அழைக்கின்றான். அதற்கான ஆதாரம், இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறியதாக அல்லாஹ் கூறும் இறைவசனமாகும். 'எனது அருமைத் தந்தையே! சைத்தானை வணங்காதீர்கள்.'
  2. முஸ்லிம்களுக்கு மத்தியில் சச்சரவுகள், குழப்பங்கள், குரோதங்கள் மற்றும் யுத்தங்களை விளைவிக்க ஷைத்தான் முயற்சிக்கின்றான்.
  3. தொழுகையின் பயன்களில் ஒன்று, அது முஸ்லிம்களுக்கு மத்தியில் உள்ள அன்பைப் பாதுகாத்து, சகோதரத்துவ பிணைப்புக்களைப் பலப்படுத்துகின்றது.
  4. இரு கலிமாக்களுக்கும் பின்னர், தொழுகையே மார்க்கத்தின் மிக முக்கியமான அடையாளச் சின்னமாகும். இதனாலேயே, முஸ்லிம்கள், தொழுகையாளிகள் என அழைக்கப்பட்டுள்ளார்கள்.
  5. அரபுத் தீபகற்பத்துக்கு ஏனைய நாடுகளுக்கு இல்லாத தனித்துவங்கள் உண்டு.
  6. நபியவர்கள் "ஷைத்தான் அரபுத் தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதிலிருந்து நிராசையடைந்து விட்டான்." என்று கூறியிருக்கும் நிலையில், அரபுத் தீபகற்பத்தின் சில இடங்களில் சிலைவணக்கம் நிகழ்ந்துள்ளதே எனக் கேட்கப்பட்டால், இது சைத்தான் வெற்றிகளையும், மக்கள் கூட்டம்கூட்டமாக இஸ்லாத்தில் நுழைவதையும் கண்ட பின்னர், அவனது உள்ளத்தில் ஏற்பட்ட எண்ணத்தை எடுத்துக் கூறுவது மாத்திரம் தான். எனவே இந்த ஹதீஸ் சைத்தானின் அனுமானத்தையே கூறுகின்றது. பின்பு, அல்லாஹ்வின் அறிவுஞானத்தின் அடிப்படையில், நடைமுறையில் அதற்கு மாற்றமாக நிகழ்ந்துள்ளது.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية النيبالية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية الموري Малагашӣ Канада الولوف الأوكرانية الجورجية المقدونية الخميرية البنجابية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு