عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ».
[قال النووي: حديث حسن] - [رواه الترمذي وغيره] - [الأربعون النووية: 12]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.
[இது நம்பகமானது (ஹஸன்) என இமாம் நவவி கூறிியுள்ளார்] - [இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்] - [அல்அர்பஊன் அந்நவவிய்யா - 12]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந் ஹதீஸில் ஒரு முஸ்லிமின் இஸ்லாத்தின் அழகுகளின் முழுமை மற்றும் அவரது நம்பிக்கையின் நிறைவு தனக்கு சம்பந்தமில்லாததை விட்டுவிடுவதும் தனக்கு எவ்விதத்திலும் பயனில்லாத வார்த்தைகள் மற்றும் செயல்களை விட்டுவிடுவதாகும் என விளக்கியுள்ளார்கள். அல்லது மார்க்க மற்றும் உலகியல் சார் விடயங்களில் பயனற்ற தேவையில்லாத விடயங்களை விட்டுவிடுவதை இது குறிக்கும். அத்துடன் தேவையற்றவற்றில் ஈடுபடுவது தேவையானதை செய்வதை தடுத்து விடும். மறுமை நாளில் இது குறித்து அனைவரும் விசாரிக்கப்படுவர். எது எப்படி இருந்தாலும் மனிதர்கள் யாவரும் அவரவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவர்.