عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«فِي الجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالْفِرْدَوْسُ أَعْلاَهَا دَرَجَةً وَمِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الجَنَّةِ الأَرْبَعَةُ، وَمِنْ فَوْقِهَا يَكُونُ العَرْشُ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الفِرْدَوْسَ».
[صحيح] - [رواه الترمذي] - [سنن الترمذي: 2531]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. அதற்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள்.
[சரியானது] - [இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்] - [ஸுனன் திர்மிதீ - 2531]
இங்கு நபிவர்கள் அறிவிப்பதாவது, மறுமையில் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் உள்ள தூரம் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. பிர்தவ்ஸுக்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள். ஏனெனில், அதுவே அனைத்து சுவனங்களுக்கும் மேலால் உள்ளது.