عن أنس وأبي هريرة رضي الله عنهما مرفوعاً: «لا يُؤْمِنُ أحدُكم حتى أَكُونَ أَحَبَّ إليه مِن وَلَدِه، ووالِدِه، والناس أجمعين».
[صحيح] - [حديث أنس -رضي الله عنه-: متفق عليه. حديث أبي هريرة -رضي الله عنه-: رواه البخاري]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள் : "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்".
ஸஹீஹானது-சரியானது - இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்

விளக்கம்

இந்நபிமொழியில் நபியவர்கள் எமக்கு அறியத்தரும் விடயம் : ஒரு முஸ்லிம் தனது பிள்ளை, தந்தை, அனைத்து மனிதர்களுடனான நேசத்தை விட தன் மீதான நேசத்தை முற்படுத்தும் வரை அவனுடைய ஈமான் பூரணமடைய மாட்டாது, தண்டனையின்றி நேரடியாக சுவனத்தில் நுழைய முடியுமான ஈமானைப் பெறமுடியாது. ஏனெனில் நபியவர்களை நேசிப்பது அல்லாஹ்வை நேசிப்பதாகும், காரணம், இறைத்தூதர் அல்லாஹ்விடமிருந்து எத்திவைப்பவர், அவனது மார்க்கத்தின் பால் அழைப்பு விடுப்பவர் ஆகும். மார்க்க ஏவல்களை எடுத்தும், விலக்கல்களைத் தவிர்ந்தும் நடக்காதவரை அல்லாஹ், ரஸூலுடனான நேசம் செல்லுபடியாக மாட்டாது. கவிதைகள் பாடி, விழாக்கள் நடத்தி, பாடல்கள் இயற்றுவதன் மூலம் அந்த நேசம் ஏற்பட மாட்டாது.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும், ஏனைய அனைத்து நேசங்களை விட அவர்களுடனான நேசத்தை முற்படுத்துவதும் அவசியமாகும்.
  2. செயல்முறை வணக்கங்களும் ஈமானின் ஒரு பகுதியாகும், ஏனெனின் நேசம் உள்ளம் சார்ந்த வணக்கமாகும், மேற்கூறப்பட்டவற்றை விட நபியவர்களை நேசிக்காதவரிடமிருந்து ஈமான் மறுக்கப்பட்டுள்ளது.
  3. இங்கு ஈமான் மறுக்கப்படுவதானது இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் அர்த்தத்தைக் கொள்ளாது.
  4. உண்மையான ஈமானின் அடையாளம் அதனுடையவரிடத்தில் பிரதிபலிக்க வேண்டும்.
  5. தனது உயிர், பிள்ளை, தந்தை, அனைத்து மனிதர்களின் நேசத்தை விடவும் நபியவர்களுடனான நேசத்தை முற்படுத்துவது அவசியமாகும்.
  6. உயிர், பொருள் அனைத்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும், ஏனெனில் உமது உயிர், பொருளை விட நபியவர்களுடனான நேசத்தை முற்படுத்துவது அவசியமாகும்.
  7. நபியவர்களின் ஸுன்னாவிற்கு உதவி செய்வதும், அதற்காகத் தனது உயிர், பொருள், அனைத்து வலிமைகளையும் செலவு செய்வது அவசியமாகும், ஏனெனில் இது நபியவர்களை நேசிப்பதன் முழுமையாகும். இதனால்தான் "நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் சந்ததியற்றவன்" எனும் வசனத்தைப் பற்றிக் கூறும் போது சில அறிஞர்கள் : "அவ்வாறுதான் அன்னாரின் ஷரீஅத்தை வெறுப்பவனும் நலவுகளற்ற சந்ததியற்றவன்" எனக் கூறியுள்ளனர்.
  8. இரக்கம், கண்ணியம், மதிப்பினால் ஏற்படும் நேசம் அனுமதிக்கப்பட்டதாகும், ஏனெனின் "தனது பிள்ளை, தந்தையை... விட தான் நேசத்திற்குரியவனாகும் வரை" எனும் வார்த்தையில் குறிப்பிட்டவர்களுடன் அடிப்படையில் நேசம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். இது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
  9. பிற மக்களுடைய வார்த்தைகளை விட நபியவர்களின் வார்த்தைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியமாகும். ஏனெனில் அனைவரையும் விட நபியவர்கள் நேசத்திற்குரியவர்களாக இருப்பின் உமது வார்த்தை உட்பட அனைவருடைய வார்த்தைகளையும் விட அன்னாரின் வார்த்தையை முற்படுத்துவது அவசியமாகும்.
மேலதிக விபரங்களுக்கு