عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ رضي الله عنه أَنَّهُ قَالَ:
صَلَّى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلَةِ، فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟» قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ، فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ: بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 846]
المزيــد ...
ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் '{ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 846]
மக்காவிற்கு அருகில் அமைந்துள்ள கிராமமான ஹுதைபிய்யாவில் -அன்றிரவு பெய்த மழையைத் தொடர்ந்து- நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுகையை நடாத்தினார்கள். ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக்கொண்ட பின் மக்களை நோக்கி தனது முகத்தைத் திருப்பி அவர்களிடம் 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். அதற்கு நபியவர்கள்; மழைபொழியும் போது மக்கள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டோர் அல்லாஹ்வை நிராகரித்தோர் என இரு பிரிவுகளாக பிரிந்துவிடுகின்றனர் என அவர்களுக்கு தெளிவு படுத்தினார்கள் அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் எமக்கு மழை பொழிந்தது எனக் கூறி மழைபொழிதல் எனும் விவகாரத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறியவர் இந்தபிரபஞ்சத்தை நிர்வகிக்கும் படைப்பாளனான அல்லாஹ்வை விசுவாசித்து, நட்சத்திரங்களை மறுத்தவராவார். இந்த,இந்த நட்சத்திரங்களினால்; எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவராவார்.மழைபொழிவதை கோல்கள் -நட்சத்திரங்களின் செயல் என இணைத்துக் கூறுவது சிறியவகை இணைவைப்பாகும். அல்லாஹ் மழைபொழிவிப்பதற்கு ஷரிஆரீதியான மற்றும் விதியின் அடிப்படையிலான இதற்கான எந்த காரணங்களையும் நட்சத்திரங்களுக்கு ஏற்படுத்தவில்லை. யார் மழை பொழிதல் மற்றும் பூமியில் நிகழும் பிற நிகழ்வுக்கு கோள்களின் தோற்றம் மற்றும் மறைவு போன்ற இயக்கங்களை காரணம் காட்டி, அவைதான் இவை நிகழ்வதற்கான உண்மையான காரணி என நம்புகிறானோ அவன் மிகப்பெரும் காபிராக இறைநிராகரிப்பாளனாக ஆகிவிடுகிறான்.