عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ، حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ: «إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ، وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللهِ حِجَابٌ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 1496]
المزيــد ...
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பிய போது பின்வருமாறு கூறினார்கள்: 'நீர் வேதமுடையவர்களிடத்தில் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி சொல்லும் படி அவர்களை அழைப்பீராக!. இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால், 'அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்' என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டால் 'அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் ஏழைகளுக்குக்கு வழங்குவதற்காக ஸகாத்தைத் கடமையாக்கியுள்ளான்' என அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் விலையுயர்ந்த பொருட்களை எடுப்பதை குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையும் கிடையாது'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 1496]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஆத் ரழியல்லாஹு அவர்களை யமன் நாட்டிற்கு அழைப்பாளராகவும், போதகராகவும் அனுப்பும் போது அவர் கிறிஸ்தவ சமூகத்தை சந்திக்கப் போவதையும், அதனால் அதற்குரிய ஆயத்தங்களுடன் செல்ல வேண்டும் என்பதையும் தனது அழைப்புப் பணியில் முக்கியமானவற்றில் ஆரம்பித்து தனது பிரச்சாரப்பணியை ஆரம்பிக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்தினார்கள். அந்த வகையில் முதலில் 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சி கூறுதல் எனும்; நம்பிக்கையைச் சரிபடுத்தலின் பால் அழைக்க வேண்டும். இதன் மூலம்தான் அவர்கள் இஸ்லாத்தினுள் நுழைவார். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களுக்கு தொழுகையை நிலைநாட்டுமாறு கட்டளையிட வேண்டும். ஏனெனில் ஒரிறைக் கொள்கையை ஏற்றதன் பின்னுள்ள மிகப்பெரும் கடமையாக தொழுகை காணப்படுகிறது. தொழுகையை அவர்கள் நிலைநாட்டினால் அவர்களில் உள்ள செல்வந்தர்களகள் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு ஸகாத் வழங்க வேண்டும் என பணிக்க வேண்டும். பின்னர் நபியவர்கள் அவர்களிடம் காணப்படும் விலையுயர்ந்த பொருள்களை ஸகாத்தாக பெறுவதை எச்சரித்தார்கள். ஏனெனில் ஸகாத் நடுத்தரமான பொருளிலிருந்தே பெறுதல் கடமையாகும். பின் அநியாயம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதினால் அவருக்கெதிராக பிரார்த்திக்கக் கூடாது என்பதற்காக அநியாயம் இழைப்பதை தவிர்ந்து கொள்ளுமாறு உபதேசம் செய்தார்கள்