+ -

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«المُسْلِمُ إِذَا سُئِلَ فِي القَبْرِ: يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»، فَذَلِكَ قَوْلُهُ: {يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالقَوْلِ الثَّابِتِ فِي الحَيَاةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ} [إبراهيم: 27].

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 4699]
المزيــد ...

பராஉ இப்னுல் ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் :
'ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும் போது, அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதுதான், (இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான் ' எனும் (14:27ஆவது) இறைவசனத்தின் கருத்தாகும்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 4699]

விளக்கம்

இறை விசுவாசி (முஃமின்); கப்ரில் விசாரிக்கப்படுவார். கப்ரில் -மண்ணறையில்- விசாரிக்கப்படுவதற்கென பொறுப்புச் சாட்டப்பட்ட முன்கர் நகீர் என்ற இரு மலக்குகள் அவரிடம் விசாரணை நடத்துவர். அவர்கள் இருவரினதும் பெயர்கள் பல ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர், அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுபவன் வேறு எவருமில்லை. முஹம்மத் -ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்- அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று உறுதிமொழி கூறுவார். இதனையே அல்லாஹ் அல் கவ்லுஸ் ஸாபித் (உறுதியான வார்த்தை) என பின்வரும் வசனத்தில் கூறிப்பிடுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அந்த வசனம் : "(இறை)நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ்; இம்மையிலும் மறுமையிலும் உறுதியான வார்த்தையைக் கொண்டு நிலைபெறச்செய்வான்'' (இப்ராஹீம்: 27)

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மண்ணறை விசாரணை உண்மையாகும்.
  2. உறுதியான வார்த்தையின் மூலம் இம்மை மறுமையில் நிலைபெறச்செய்வதன் ஊடாக தனது அடியார்களான முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும்; அருட்கொடை குறிப்பிடப்பட்டுள்ளமை.
  3. தவ்ஹீதை -ஏகத்துவத்தை- ஏற்று சாட்சியமளிப்பதும் அதன் மீது மரணிப்பதன் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ளமை.
  4. உறுதியான வார்த்தையின் மூலம் நிலை பெறச்செய்தல் என்பது அல்லாஹ் முஃமின்களுக்கு இவ்வுலகில் ஈமானிலும்; நேரான பாதையில் செல்வதிலும்; ஸ்திரத்தன்மையை அளித்து நிலைபெறச் செய்கின்றமை. மேலும் மரண வேளையில் ஏகத்துவத்தில் மரணிக்கச் செய்வதிலும், கப்ரில் வானவர்களின் கேள்விகளுக்கு உறுதியாக பதிலளிப்பதற்கான உறுதியையும் வழங்குகின்றமை என்ற கருத்தைக் குறிக்கும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு