عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا مَنْ لَهُ نَعْلَانِ وَشِرَاكَانِ مِنْ نَارٍ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ كَمَا يَغْلِ الْمِرْجَلُ، مَا يَرَى أَنَّ أَحَدًا أَشَدُّ مِنْهُ عَذَابًا، وَإِنَّهُ لَأَهْوَنُهُمْ عَذَابًا».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 213]
المزيــد ...
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அந்நுஃமான் பின் பஷீர் (ரலி) ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்பக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான், மிகைக்குறைந்த தண்டனை உரியவர்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [முஸ்லிம் - 213]
இங்கு நபி (ஸல்) அவர்கள், நரகவாதிகளில் குறைந்த தண்டனை உள்ளவர், நெருப்பினால் ஆன இரு செருப்புக்களும், இரு செருப்பு வார்களும் உள்ளவராவார். இவ்விரண்டின் உஷ்ணத்தின் காரணமாக அவரது மூளை, செம்புச் சட்டிகள் கொதிப்பது போன்று கொதிக்கும். உடல், உடல், உள வேதனைகள் ஒருசேர இருப்பதால், அவரை விடக் கடுமையான வேதனைகொண்ட யாரும் இருக்கமாட்டார்கள் என்று அவர் நினைப்பார். ஆனாலும், அவர்தான் மிகைக்குறைந்த தண்டனை உரியவர் என்று கூறுகின்றார்கள்.