عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ»، قَالَ عُمَرُ: فَوَاللهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا ذَاكِرًا وَلَا آثِرًا.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 1646]
المزيــد ...
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
'உங்களின் மூதாதையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை என உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் .
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 1646]
இந்த ஹதீஸில் அல்லாஹ் மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடுத்ததாக நபி ஸல்லலல்லாஹுஅலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். யார் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வைத்தவிர வேறு எதிலும் சத்தியம் செய்ய வேண்டாம். இந்த செய்தியை உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டது முதல் அவர் விரும்பியோ அல்லது பிறரின் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவோ அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை தடுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள்.