عن أبي بشير الأنصاري رضي الله عنه "أنه كان مع رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره، فأرسل رسولا أن لا يَبْقَيَنَّ في رقبة بَعِيرٍ قِلادَةٌ من وَتَرٍ (أو قلادة) إلا قطعت".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் அபூபஷீர் அன்ஸாரீ (ரலி) அவர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, ''எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகிற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் வைத்து, கண்திருஷ்டிக்காகவும், ஆபத்துக்களிலிருந்து காப்பதற்காகவும் ஒட்டகங்களின் கழுத்துக்களில் கட்டப்படும் கயிறுகளை நீக்கும்படி அறிவிக்குமாறு ஒரு நபரை அனுப்பி வைத்தார்கள். ஏனெனில் இது தவிர்ந்து கொள்ளப்பட வேண்டிய இணைவைப்பில் உள்ளவையாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி சிங்கள மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான்
மொழிபெயர்ப்பைக் காண

நன்மைகள்

  1. ஆபத்துக்களிலிருந்து பாதுகாக்க கயிறுகளைக் கட்டுவது ஹராமாகும், அதுவும் தாயத்துக்களைத் தொங்கவிடுவதில் சேர்கின்றது.
  2. மக்களுக்குத் தமது கொள்கையைப் பாதுகாக்கும் விடயங்களை எத்திவைப்பது அவசியமாகும்.
  3. முடிந்தளவு தீமைகளைத் தடுப்பது கட்டாயமாகும்.
  4. தனிநபர்களின் செய்திகளையும் (நம்பிக்கையானவராக இருக்கும் பட்சத்தில்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  5. மந்திரித்துக் கட்டப்படும் கயிற்று மாலைகள் எந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பினும் அது பயனளிக்கும் என்ற நம்பிக்கையைத் தகர்த்தல்.
  6. தலைவரின் பிரதிநிதி தனக்கு வழங்கப்படும் பொறுப்பில் அவருக்குப் பதிலாக செயற்படுவார்.
  7. மக்களுடைய நிலமைகளைக் கண்காணிப்பது, அவர்களது தேவைகளைக் கண்டறிவது சமூகத் தலைவர்களின் கடமையாகும்.
  8. மக்களை மார்க்க விதிமுறைகளுக்கு அமைய கையாள்வது சமூகத் தலைவர்களுக்கு அவசியமாகும். அவர்கள் ஹராத்தை செய்தால் தடுக்க வேண்டும், கடமையில் அலட்சியமாக இருந்தால் ஊக்கப்படுத்த வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு