عن عبد الله بن عكيم رضي الله عنه مرفوعاً: «مَنْ تَعَلَّقَ شيئا وُكِلَ إليه».
[حسن] - [رواه أحمد والترمذي]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பாதுகாப்பிற்காக யார் ஒரு பொருளைத் தொங்க விடுகிறாரோ அதன் பக்கமே அவர் சாட்டப்பட்டு விடுவார்".
ஹஸனானது-சிறந்தது - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

தனது உள்ளத்தால், அல்லது செயலினால், அல்லது இரண்டினாலும் பயனை எதிர்பார்த்தோ, தீங்கைத் தடுக்கவோ ஒரு பொருளை நோக்கிச் சென்றால் அல்லாஹ் தனது பாதுகாப்பைக் கைவிட்டுவிட்டு, அப்பொருளிடமே அவனை சாட்டி விடுகின்றான். அல்லாஹ்வை யார் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவன் போதுமானவன், அனைத்து சிரமங்களையும் இலகுபடுத்திக் கொடுத்து விடுவான். அவனல்லாத ஒன்றைச் சார்ந்திருந்தால் அதன் பக்கமே அவனை சாட்டி விட்டு, உதவ மறுத்து விடுவான்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அல்லாஹ் அல்லாதோரைச் சார்ந்திருப்பதைத் தடுத்தல்.
  2. அனைத்து விவகாரங்களிலும் அல்லாஹ்வைச் சார்ந்திருப்பது அவசியமாகும்.
  3. இணைவைப்பின் தீங்கு, அதன் மோசமான முடிவு என்பவற்றை விளக்குதல்.
  4. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும்.
  5. ஒரு செயலின் முடிவு நல்லதோ, தீயதோ அதனைச் செய்தவனுக்கே திரும்பும்.
  6. அல்லாஹ்வைப் புறக்கணித்து, அவனல்லாதோரிடம் பயனை எதிர்பார்ப்போருக்கு உதவி மறுக்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு