عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَحْلِفُوا بِالطَّوَاغِي، وَلَا بِآبَائِكُمْ».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 1648]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸமுரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
"(தாகூத்கள்") சிலைகள் மீதோ உங்களின் பெற்றோர்களின் மீதோ நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாம்.
[சரியானது] - [இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [முஸ்லிம் - 1648]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'தவாகி'க்கள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்கிறார்கள். 'தவாகி' என்பது 'தகியா'.என்ற ஒருமைச் சொல்லின் பன்மையாகும். இச்சொல்லானது, அல்லாஹ்வுக்குப்பதிலாக இணைவைப்பாளர்கள் வணங்கிய ஜாஹிலிய்யாக் கால சிலைகளைக் குறிக்கும். இதுவே அவர்களின் அத்துமீறல்களுக்கும் சத்தியத்தை நிராகரிப்பதற்கும் காரணமாக அமைந்தன. அதேபோல மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடை செய்துள்ளார்கள். ஏனென்றால் இஸ்லாத்திற்கு முந்தைய காலமான ஜாஹிலியயாக் காலத்தில், அரேபியர்கள் தங்கள் மூதாதையர் மீது பெருமை மற்றும் மரியாதையின் நிமித்தம் சத்தியம் செய்து வந்தனர்.