عَن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ: مَنْ خَلَقَ كَذَا؟ مَنْ خَلَقَ كَذَا؟ حَتَّى يَقُولَ: مَنْ خَلَقَ رَبَّكَ؟ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللهِ وَلْيَنْتَهِ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3276]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்.
[சரியானது] - [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்] - [புஹாரி - 3276]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஃமின் மீது ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தின் போது வரும் கேள்விகளுக்கு ஆரோக்கியமான ஒரு தீர்வை குறிப்பிடுகிறார்கள். ஷைத்தான் இதனைப் படைத்தது யார்? இதனைப் படைத்தது யார்? வானத்தைப் படைத்தது யார்? பூமியைப்படைத்தது யார் எனக் கேட்பான். அதற்கு முஃமின் மார்க்கம் மற்றும் இயல்பூக்கம் மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் அல்லாஹ் எனப் பதிலளிப்பான். என்றாலும் ஷைத்தான் ஊசலாட்டத்தில் இந்த எல்லையில் நிற்கமாட்டான் மாறாக இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்து சென்று உனது இரட்சகனைப் படைத்தவன் யார்? எனக் கேட்டுவிடுவான். அவ்வேளை ஒரு முஃமின் இந்த ஊசலாட்டத்திலிருந்து தடுத்துக் கொள்ள மூன்று விடயங்களை செய்ய வேண்டும்.
அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் (ஆமன்து பில்லாஹ்) எனக் கூறுதல்.
ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுதல்( அஊது பில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்) எனக் கூறுதல்
ஊசலாட்டத்தை தொடராது நிறுத்திக் கொள்ளுதல்.