+ -

عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رضي الله عنه قَالَ: قِيلَ لَهُ: أَلَا تَدْخُلُ عَلَى عُثْمَانَ فَتُكَلِّمَهُ؟ فَقَالَ: أَتَرَوْنَ أَنِّي لَا أُكَلِّمُهُ إِلَّا أُسْمِعُكُمْ؟ وَاللهِ لَقَدْ كَلَّمْتُهُ فِيمَا بَيْنِي وَبَيْنَهُ، مَا دُونَ أَنْ أَفْتَتِحَ أَمْرًا لَا أُحِبُّ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ فَتَحَهُ، وَلَا أَقُولُ لِأَحَدٍ يَكُونُ عَلَيَّ أَمِيرًا: إِنَّهُ خَيْرُ النَّاسِ بَعْدَمَا سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«يُؤْتَى بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ، فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُ بَطْنِهِ، فَيَدُورُ بِهَا كَمَا يَدُورُ الْحِمَارُ بِالرَّحَى، فَيَجْتَمِعُ إِلَيْهِ أَهْلُ النَّارِ، فَيَقُولُونَ: يَا فُلَانُ مَا لَكَ؟ أَلَمْ تَكُنْ تَأْمُرُ بِالْمَعْرُوفِ، وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ؟ فَيَقُولُ: بَلَى، قَدْ كُنْتُ آمُرُ بِالْمَعْرُوفِ وَلَا آتِيهِ، وَأَنْهَى عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ».

[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 2989]
المزيــد ...

உஸாமா பின் ஸைத் ரழியல்ல்லாஹு அன்ஹு அவர்களிடம், 'நீங்கள் இன்னாரிடம் உஸ்மான் ரழியல்ல்லாஹு அன்ஹு அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர (வேறெதுவும்) அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்துவிடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒரு மனிதர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்லமாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிட மிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்' என்று கூறிவிட்டு நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டேன் என்றார்கள்:
மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கு இயந்திரத்தைச் சுற்றிவருவதைப்போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, 'இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர் நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்ய வில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்துவந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்துவந்தேன்'என்று கூறுவார்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 2989]

விளக்கம்

உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சிலர் : நீங்கள் உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் குறித்து பேசுவதோடு அதனை முழுமையாக கலைவது குறித்து ஏன் முயற்சி செய்யக்கூடாது ? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், பொது நலன் நாடியும் குழப்பத்தை மேலும் தூண்டி விடாதிருக்கவும் இது குறித்து இரகசியமாக தான் கதைத்தாக அவர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் அவர் தான் மக்கள் மன்றத்தில் -(பொதுத் தளத்தில்) தலைவர்களை கண்டிப்பதை (விமர்சிப்பதை) விரும்பவில்லை என்ற தனது நோக்கத்தை அவர்களிடம் முன்வைத்தார். அவ்வாறு பகிரங்கமாக கண்டிப்பது கலீபாவுக்கெதிரான அத்துமீறலுக்கு காரணமாக அமைவதோடு, குழப்பம் மற்றும் தீமையின் வாயிலை திறக்க வாய்ப்பாக அமைந்து விடும். ஆகையால் அதனை திறக்கும் முதலாவது நபராக தான் இருப்பதை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
பின் உஸாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்: தான் தலைவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை கூறுவதாகவும், யாரையும்- அவர் தலைவராக இருந்தாலும்- முகஸ்துதிக்காகப் புகழ்வதில்லை என்றும், அவர்கள் தன்னைப் பொய்யாகப் புகழ்வதற்காகப் புகழ்ந்து பேசுவதில்லை என்றும் கூறினார்கள். மறுமை நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என்ற நபியவர்களின் ஹதீஸைக் கேட்ட பிறகு இவ்வாறு நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். நரக நெருப்பு மிகவும் தீவிரமாகவும் கடுமையாகவும் இருப்பதன் காரணமாக, அவரது குடல்கள் அவரது வயிற்றிலிருந்து வெளியேறும். அப்படிப்பட்ட நிலையில், கழுதை ஆலைக்கல்லைச் சுற்றிச் சுழல்வது போல அந்த நபர் தனது குடலுடன் சுற்றிக் கொண்டிருப்பார், இந்தக் காட்சியைப் பார்த்து, நரகவாசிகள் அவரைச் சூழ வட்டமாக ஒன்று கூடி, 'ஓ இன்னாரே!' நீர் எங்களுக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டு, தீமையை விட்டும் எங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள்.
அதற்கு அவர்: நான் உங்களுக்கு நன்மை செய்யும்படி கட்டளையிட்டேன், ஆனால் நானே அதைச் செய்யவில்லை. நான் தீமையைத் தடுத்தேன், ஆனால் நானே அதில் ஈடுபட்டேன். என்று கூறினார்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. ஆட்சியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரை கூற வேண்டும் என்பதே அடிப்படையாகும். அது குறித்து மக்கள் மத்தியில் பகிரங்கமாக பேசுவது கூடாது.
  2. தனது சொல்லுக்கு மாற்றமாக செயல்படுகின்ற ஒருவருக்கான கடுமையான எச்சரிக்கையை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.
  3. மக்கள் ஆட்சியாளர்களிடம் பணிவாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வதோடு நல்லதைச் செய்ய அவர்களுக்குக் கட்டளையிட வேண்டும், தவறானதைத் தடுக்க வேண்டும்.
  4. உண்மையான ஒரு விவகாரத்தில் ஆட்சியாளர்களைப் புகழ்ந்து பேசி, மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு முன்னால் வேறு ஒன்றைச் சொல்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு