عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«أَلْحِقُوا الفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَلِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 6737]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
அனந்தரச் சொத்துக்களை (அவற்றில் அளவீடு கூறப்பட்ட பங்குகளை) உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சியவை, மிகநெருங்கிய ஆணுக்கு உரியதாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 6737]
இங்கு நபியவர்கள், அனந்தரச் சொத்துக்களைப் பிரிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவர்கள், தகுதியானவர்களுக்கு, அல்லாஹ் விரும்பும் பிரகாரம், நீதமான, மார்க்க அடிப்படையிலான பங்கீடாக பங்கீடு வைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். எனவே, வரையறுக்கப்பட்ட பங்கீடுகளை உடையவர்களுக்கு, அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி அவர்களது பங்கீடு வழங்கப்படும். மூன்றில் இரண்டு, மூன்றில் ஒன்று, ஆறில் ஒன்று, அரைவாசி, நான்கில் ஒன்று, எட்டில் ஒன்று என்பனவே அவையாகும். அதற்குப் பின்னர் எஞ்சியவை, மரணித்தவருக்கு மிக நெருக்கமான ஓர் ஆணுக்கு வழங்கப்படும். அவர்கள் 'அஸபா' என அழைக்கப்படுவார்கள்.