عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال:
«يَسِّرُوا وَلَا تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلَا تُنَفِّرُوا».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 69]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
'இலகு படுத்துங்கள், சிரமப்படுத்தாதீர்கள், சுபசோபனம் கூறுங்கள்; (நல்லவற்றையே கூறுங்கள்) வெறுப்படையச் செய்யாதீர்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 69]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இம்மை மறுமை விடயங்களில் மக்களுக்கு இலகு படுத்துமாறும் சிரமப்படுத்தாதிருக்குமாறும் கட்டளையிடுகிறார்கள். இலகு படுத்தலும் சிரமப்படுத்தலும் அல்லாஹ் அனுமதித்த மார்க்கமாக்கிய வரம்புகளுக்குள் இருத்தல் வேண்டும்.
அவர்களை வெறுக்கச் செய்யாது, நன்மையான வற்றைக் கொண்டு நற்செய்தி கூறுமாறும் ஆர்வமூட்டுகிறார்கள்.