عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما مرفوعاً: «الدنيا متاع، وخير متاعها المرأة الصالحة».
[صحيح] - [رواه مسلم]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் (ரலி) கூறுகின்றார்கள் : "இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே".
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]
உலகில் சில காலம் அனுபவிக்கத் தக்க சுகபோகங்கள் இருக்கின்றன. அவை பின்னர்இல்லாமல் ஆகி விடும். ஆயினும் அதில் சிறந்த பயனுள்ள பொருள் மறு உலக வாழ்வுக்காக ஒத்துழைப்பு வழங்கும் நன் நடத்தையுள்ள பெண்ணாவாள், மேலும் இதனை நபியவர்கள் பிரிதொரு ஹதீஸ் மூலம் "அவர் அவளைப் பார்த்ததுவும் அவரை அவள் மகிழ்ச்சிடடையச் செய்வாள். அவர் அவளுக்குக் கட்டளையிட்டால் அதற்கு அவள் வழிப்படுவாள். இன்னும் அவளிடம் அவர் இல்லாத போது அவள் தன்னையும் அவருடைய பொருளையும் பாதுகாப்பாள்" என்று தெளிவு படுத்தினார்கள்.