عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخَيْرُكُمْ خَيْرُكُمْ لِنِسَائِهِمْ».
[حسن] - [رواه أبو داود والترمذي وأحمد] - [سنن الترمذي: 1162]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழில்லாஹு அறிவித்துள்ளார்கள்:
'பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர், தங்களின் மனைவியரிடம் சிறந்தவர்'.
[ஹஸனானது-சிறந்தது] - - [سنن الترمذي - 1162]
முகமலர்ச்சி, நன்மை செய்தல், அழகிய வார்த்தை, தீங்கை தடுத்தல் போன்ற நற்குணங்களினால் மனிதர்கள் ஈமானில் பரீபூரண நிலையை அடைகிறார்கள் என இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
இறைவிசுவாசிகளில் சிறப்புக்குரியோர், தனது மனைவி, மகள், சகோதரிகள், இனபந்துக்களான நெருங்கிய பெண்கள் ஆகியோரிடத்தில் சிறந்தவர்களாக இருப்போர் ஆவர். காரணம் அவர்களே மனிதர்களில் நற்குணத்துடன் நடந்து கொள்ள தகுதியானவர்கள்.