ஹதீஸ் அட்டவணை

'பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர், தங்களின் மனைவியரிடம் சிறந்தவர்'
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
யாருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களில் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகின்றாரோ, அவர் மறுமையில் உடலின் ஒரு பாதி வளைந்த நிலையில் வருவார்
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது
ஒரு பெண் தன் கணவனுக்கு தீங்கிழைக்க (தொல்லை கொடுக்க) வேண்டாம். அவ்வாறு தீங்கிழைக்கும் போது சொர்க்கத்தில் இருக்கும் அவனின் மனைவியான சொர்கத்து கன்னி உலகத்தில் உள்ள தீங்கிழைக்கும் மனைவியை நோக்கி, "பெண்னே தீங்கிழைக்காதே, அல்லாஹ்வின் சாபம் உனக்கு உண்டாகட்டும். ஏனெனில் உன்னோடு இருக்கும் கணவர் ஒரு விருந்தாளியாவார், அவர் உன்னை விட்டுப்பிரிந்து எங்களுடன் அவசரமாக இணைந்து கொள்வார்.
عربي ஆங்கில மொழிபெயர்ப்பு உருது