عن معاذ بن جبل رضي الله عنه مرفوعاً: «لا تؤذي امرأةٌ زوجَها في الدنيا إلا قالت زوجته من الحُورِ العِينِ لا تُؤْذِيهِ قاتلك الله! فإنما هو عندك دَخِيلٌ يُوشِكُ أن يفارقَكِ إلينا».
[صحيح] - [رواه الترمذي وابن ماجه وأحمد]
المزيــد ...
முஆத் இப்னு ஜபல் ரழி யல்லாஹ்ஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ஒரு பெண் தன் கணவனுக்கு தீங்கிழைக்க (தொல்லை கொடுக்க) வேண்டாம். அவ்வாறு தீங்கிழைக்கும் போது சுவர்க்கத்தில் இருக்கும் அவனின் மனைவியான சுவர்க்கத்து கன்னி உலகத்தில் உள்ள தீங்கிழைக்கும் மனைவியை நோக்கி, "பெண்னே! தீங்கிழைக்காதே, அல்லாஹ்வின் சாபம் உனக்கு உண்டாகட்டும். ஏனெனில் உன்னோடு இருக்கும் கணவர் ஒரு விருந்தாளியாவார், அவர் உன்னை விட்டுப்பிரிந்து எங்களுடன் அவசரமாக இணைந்து கொள்வார்.
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]
நபி ஸல் அவர்கள் மனைவி கணவனுக்கு தீங்கிழைப்பதை (தொல்லை கொடுப்பதை) தடுத்துள்ளார்கள்.ஏனெனில் அந்தக் கணவர் உலகத்தில் ஒரு விருந்தாளி, அவர் வெகு விரைவில் மறுமை நோக்கி பயணமாகி சொர்க்கத்தில் நுழைந்து வேறொரு பெண்ணின் சொந்தக்காரராக மாறிவிடுவார்.