+ -

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ الدُّنْيَا حُلْوَةٌ خَضِرَةٌ، وَإِنَّ اللهَ مُسْتَخْلِفُكُمْ فِيهَا، فَيَنْظُرُ كَيْفَ تَعْمَلُونَ، فَاتَّقُوا الدُّنْيَا وَاتَّقُوا النِّسَاءَ، فَإِنَّ أَوَّلَ فِتْنَةِ بَنِي إِسْرَائِيلَ كَانَتْ فِي النِّسَاءِ».

[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2742]
المزيــد ...

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
“நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இஸ்ரவேல் சந்ததிகளில் தோன்றிய குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் விவகாரத்திலாகும்”.

[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2742]

விளக்கம்

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகமானது சுவையில் இனிமையானது எனவும் பார்ப்பதற்கு கவர்ச்சி நிறைந்ததாகவும் உள்ளது எனவும் தெளிவுபடுத்துகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறக் காரணம் என்னவெனில் மனிதன் இதில் கவர்ச்சியுற்று மூழ்கிச்செல்வது மாத்திரமல்லாது அதனையே தனது முழு இலக்காகவும் ஆக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது என்பதினாலாகும். நாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோமா அல்லது கட்டுப்படாது நடக்கிறோமா? என்ற எமது செயல் முறை குறித்து அவதானிக்கவே இவ்வுலகில் எம்மை ஒருவர் பின் ஒருவராக பிரதிநிதியாக வைத்துள்ளான். மேலும் நபியர்கள் இந்த ஹதீஸில் இவ்வுலக பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பணிக்கிறார்கள். ஏனெனில் இவ்வுலக இன்பங்களில் திழைத்திருப்பது அல்லாஹ் உங்களுக்கிட்ட கட்டளைகளை விட்டுவிட்டு அவன் தடுத்த விடயங்களின் பால் அவை இட்டுச்செல்ல வழிவகுத்து விடும். இஸ்ரவேல் சந்ததிகளில் ஏற்பட்ட குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் சம்பந்தப்பந்தப் பட்டது என்பதினால், உலக கவர்ச்சிகளில் பெண்களின் கவர்ச்சியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதே மிக முக்கிய விடயமாகும்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. தக்வாவை –உள்ளச்சத்தை- பேணுமாறு வலியுறுத்தப்பட்டிருப்பதோடு உலகின் புறவயமான அலங்காரங்களில் மூழ்கி விடாதிருத்தல்.
  2. பெண்களைப் பார்த்தல், அவர்கள் அந்நிய ஆண்களுடன் கலத்தல் போன்ற விடயங்களில் அலட்சியமாக இருப்பதினால் அவர்களின் கவர்ச்சிக்குட்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
  3. உலகின் கவர்ச்சிகளில் பெண்களின் கவர்ச்சியே மிகவும் பெரியது.
  4. முன்னைய சமுதாயங்களின் நிகழ்வுகளிலிருந்து படிப்பினை பெறுதல். காரணம் இஸ்ரவேல் சமுதாயத்தில் நிகழ்ந்தவை பிற சமூகத்திலும் நடப்பதற்கான வாய்ப்புண்டு.
  5. பெண்கள் கவர்ச்சி-சோதனை- என்பது அவள் ஒரு மனைவியாக இருக்கும் நிலையில் அவள் தனது கணவனுக்கு அவனின் சக்திக்கு மீறிய செலவுகளை சில வேளை பணிக்க முடியும். இதனால் அவன் தன்னை மார்க்க விவகாரங்களில் ஈடுபடுத்திக் கொள்வதை தவிர்த்து, உலகை தேடுவதில் தன்னை அர்ப்பணிப்பதற்கு இது வழிவகுத்துவிடும். அத்துடன் அவள் ஒரு அந்நியபெண்ணாக இருந்து தன்னை அலங்கரித்து அழகையும் வெளிப்படுத்தி வெளியே நடமாடுபவளாகவும், ஆண்களுடன் சர்வசாதாரணமாக கலந்து இருப்பவளாகவும் இருப்பதன் மூலம் ஆண்கள் கவரப்பட்டு அவளின் கவர்ச்சியில் விழுந்து அனைத்து தரத்திலான விபச்சாரத்திலும் விழவும் வழிவகுத்துவிடும். ஆகவே ஒரு முஃமின் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதுடன் அவர்களின் இச்சோதனைகளிருந்து காப்பற்றப்பட வேண்டும் எனவும் அவனிடம் ஆதரவு வைக்க வேண்டும்
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு