عن عائشة رضي الله عنها : أن النبي صلى الله عليه وسلم قال: «السِّواك مَطْهَرَةٌ للْفَم مَرْضَاةٌ لِلرَّبِّ».
[صحيح] - [رواه النسائي وأحمد والدارمي]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "பல் துலக்கல் வாயை சுத்தம் செய்யும், இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்".
ஸஹீஹானது-சரியானது - இந்த ஹதீஸை அந்நஸாயி பதிவு செய்துள்ளார்

விளக்கம்

பல் துலக்கல் வாயிலுள்ள அழுக்குகள், துர் வாடை மற்றும் தீங்கிழைக்கும் அனைத்தையும் நீக்கி வாயை சுத்தப்படுத்தும். மேலும் பற்தூரிகை, பற்பசை போன்று வேறு அசுத்தம் போக்கிகளைக் கொண்டு பற் துலக்கினாலும் பற் துலக்கலின் ஸுன்னத் உண்டாகி விடும். மேலும் அது இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தரும். ஏனெனில் பல் துலக்கலானது அல்லாஹ் அடியானின் மீது திருப்தி அடையும் காரணிகளில் ஒன்றாகும்.மேலும் பல் துலக்களில் பல நன்மைகள் இருக்கின்றன. அது வாயை சுத்தப்படுத்தும், ஈறுகளை பலப்படுத்தும், பார்வையைத் தெளிவாக்கும், சளியை அகற்றும், ஸுன்னாவுக்கு இசைவாக இருக்கும், மலக்குகளுக்கு மகிழ்ச்சியை தரும், இறைவனைத் திருப்திப்படுத்தும், நன்மையை அதிகப்படுத்தும், இரைப்பையை சீர்படுத்தும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பல் துலக்கல் வாயை சுத்தப்படுத்தும் வழிமுறையாகும்.
  2. அல்லாஹ் சுத்தத்தையும், சுத்தமாக இருப்போரையும் விரும்புகின்றான், இதனால்தான் அவனுடைய திருப்தியைப் பெறுவதற்குத் துணைபுரிபவற்றை மார்க்கமாக ஆக்கியுள்ளான்.
  3. பல் துலக்கலின் சிறப்பு இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  4. நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு பல் துலக்கலை அதிகப்படுத்துமாறு ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.
  5. ஹதீஸ் பொதுவாகவே இடம்பெற்றுள்ளதால் நோன்பாளி பகல் பொழுதின் ஆரம்பத்திலும், இறுதியிலும் எந்நேரத்திலும் மிஸ்வாக் செய்யலாம்.
  6. மிஸ்வாக் செய்வது அல்லாஹ் அடியானைப் பொருந்திக் கொள்ளும் காரணிகளில் ஒன்றாகும்.
  7. பொருத்தம் எனும் பண்பு அல்லாஹ்விற்கு அவனது தகுதிக்கு ஏற்றவாறு உண்டு.