عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَشْرٌ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: «عِشْرُونَ» ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، فَرَدَّ عَلَيْهِ فَجَلَسَ، فَقَالَ: «ثَلَاثُونَ».
[حسن] - [رواه أبو داود والترمذي وأحمد والدارمي] - [سنن أبي داود: 5195]
المزيــد ...
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரல்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'இருபது' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'முப்பது' என்று கூறினார்கள்.
[நம்பகமானது (ஹஸன்)] - [இமாம்களான அபூதாவூத், திர்மிதி, அஹ்மத், தாரமீ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் அபூ தாவூத் - 5195]
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கு பதில் அளித்ததும் அவர் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'பத்து நன்மைகள் அவருக்கு எழுதப்பட்டுவிட்டன' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு இருபது நன்மைகள்' என்று கூறினார்கள். பின்னர் ஒரு மனிதர் வந்து, 'அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ' என்று கூறினார். நபியவர்கள் அதற்கும் பதில் அளித்ததும் அவரும் அமர்ந்து விட்டார். அப்போது நபியவர்கள், 'அவருக்கு முப்பது நன்மைகள்' என்று கூறினார்கள். அதாவது ஒவ்வொரு சொல்லுக்கும் பத்து நன்மைகள் உண்டு.