عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال:
«أحْفُوا الشَّوَارِبَ وأَعْفُوا اللِّحَى».
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 259]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் :
'மீசையைக் கத்தரியுங்கள், தாடியை வளர விடுங்கள்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 259]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீசையை கத்தரிக்குமாறு ஆணையிடுகிறார்கள். அத்துடன் அதனை கத்தரிக்காது விட்டுவிடுவதை எச்சரிப்பதோடு அதனை இயலுமான வரை கத்தரிக்குமாறு வேண்டுகிறார்கள்.
மீசையை நன்கு கத்தரிக்குமாறு குறிப்பிட்ட நபியவர்கள் தாடியை நன்கு அடர்த்தியாக வளர்க்குமாறு கட்டளையிடுகிறார்கள்.