+ -

عَنْ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ رَضِيَ اللَّهُ عَنْها أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا فَزِعًا يَقُولُ:
«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ».

[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 3346]
المزيــد ...

நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் பதற்றத்துடன் வந்து,
'அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்...' என்று பதிலளித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 3346]

விளக்கம்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸைனப் பின் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பயந்து நடுங்கிய நிலையில்; வந்து 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார்கள்' லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியது விரும்பத்தகாத ஒரு விடயம் நிகழவிருப்பதை எதிர்பார்த்து கட்டியம் கூறுவதையும், அதிலிருந்து விமோசனம் பெற –தப்பிக்க அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவதன் மூலம் மாத்திரமே சாத்தியம் ஆகும் என்பதைக் குறிக்கும். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் - அணை- திறக்கப்பட்டுவிட்டது'. இந்த அணை துல்கர்னைன் அவர்கள் கட்டினார்கள். அது கட்டப்பட்டதை விவரிக்கும் முகமாக தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டினார்கள். அதற்கு ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: எங்களில் ஸாலிஹான முஃமின்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் எம்மீது அழிவை எப்படி ஏற்படுத்துவானா? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாவகாரியங்கள் தீயசெயல்கள் மானக்கேடான விடயங்கள் விபச்சாரம் மதூபானம் ஆகியவை அதிகரிக்கும்போது அழிவு பொதுவாக ஏற்படும் என்று குறிப்பிட்டார்கள்.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. பயம் ஒரு விசுவாசியின் இதயத்தை அல்லாஹ்வை நினைப்பதிலிருந்து திசை திருப்பாது ஏனெனில் அல்லாஹ்வை நினைவு கூர்வது இதயங்களுக்கு உறுதியையும் அமைதியையும் தருகிறது.
  2. இந்த ஹதீஸில், பாவங்கள் கண்டிக்கப்பட்டு அவை பரவாமல் தடுக்க வலியுறுத்தப்பட்டிருத்தல் .
  3. நல்ல மனிதர்கள் பலர் இருந்தும், சமுதாயத்தில் பாவங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தால், அவற்றைத் தடுக்கத் தவறுவதும், அவை பரவுவதைக் கண்டிக்கத் தவறுவதும் பொதுவாக அனைவருக்கும் அழிவையே ஏற்படுத்தும்.
  4. பேரழிவுகள்,(துன்பங்கள்) அவை நல்லோர் தீயோர்; என்ற பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் ஏற்படும். இருப்பினும், மறுமை நாளில் அவர்கள் தங்கள் எண்ணங்களின் படியே மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
  5. இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்கள் அரேபியர்களைப் பற்றி குறிப்பாகக் குறிப்பிட்டு, 'இது இந்த அரேபியர்களுக்கு வரவிருக்கும் பேரிடரிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக' என்று கூறினார்கள். ஏனென்றால் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது இஸ்லாத்தைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் அவர்கள்தான்.
மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி தாய்லாந்து ஜெர்மன் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية الليتوانية الدرية الصربية Кинёрвондӣ الرومانية المجرية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية المقدونية الخميرية الماراثية
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு