+ -

عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعاً: "إن من شرار الناس من تُدركهم الساعة وهم أحياء، والذين يتخذون القبور مساجد".
[حسن] - [رواه أحمد]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "தாம் உயிருடன் இருக்கும் போது மறுமை நிகழ்வோறும், சமாதிகளை வழிபாட்டுத்தளங்களாக எடுப்போருமே மக்களில் மிக மோசமானவர்கள்".
[ஹஸனானது-சிறந்தது] - [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

விளக்கம்

மறுமை நிகழும் போது உயிரோடிருப்பவர்களே மக்களில் மோசமானவர்களென நபியவர்கள் கூறியுள்ளார்கள். மற்றும் சிலர் சமாதிகளுக்கருகில், அல்லது அவற்றை முன்னோக்கி தொழுகின்றனர், மேலும் அவற்றின் மீது வான்மோடுகளைக் கட்டுகின்றனர். இது இத்தீயவர்களைப் போன்று தமது சமூகத்தினரும் தமது நபிமார்களின் சமாதிகளில் செயற்படக்கூடாது என்பது பற்றிய ஓர் எச்சரிக்கையாகும்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி இந்தோனேஷியன் உய்குர் மொழி வங்காள மொழி பிரஞ்சு துருக்கிய மொழி ரஷியன் போஸ்னியன் சிங்கள மொழி ஹிந்தி மொழி சீன மொழி பாரசீக மொழி வியட்நாம் மொழி தகாலூக் குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو Осомӣ Албанӣ السويدية الأمهرية الهولندية الغوجاراتية Қирғизӣ النيبالية Юрба الليتوانية الدرية الصربية الصومالية Кинёрвондӣ الرومانية التشيكية الموري Малагашӣ Урумӣ Канада الولوف Озарӣ الأوكرانية الجورجية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. மறுமை நாள் நிகழும் என்பதை உறுதிப்படுத்தல்.
  2. தீயவர்கள் மீதே மறுமை நிகழும்.
  3. சமாதிகள் மீது பள்ளிகள் கட்டுவதும், கட்டாமல் அங்கு தொழுவதும் கூடாது, ஏனெனில் கட்டடம் இல்லாவிடினும் ஸுஜுது செய்யப்படும் அனைத்து இடங்களும் பள்ளியாகும்.
  4. சமாதிகளுக்கு அருகில் தொழுவதை இந்நபிமொழி எச்சரிக்கின்றது. ஏனெனில் அது இணைவைப்பிற்கான வழியாகும்.
  5. நல்லடியார்களின் சமாதிகளை வழிபாட்டுத்தளங்களாக எடுப்பவர்கள் மக்களில் தீயவர்களாகும், அதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அவர்கள் நாடினாலும் சரியே.
  6. இணைவைப்பு, அதன் வழிகள், அதன்பால் நெருக்கமாக்குபவை போன்றவற்றை விட்டும் எச்சரித்தல். அவற்றை செய்பவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும் சரியே.
  7. நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போன்றே சமாதிகள் மீது பள்ளிகள் கட்டப்படுவது அவர்களின் அற்புதத்தை எடுத்துக் காட்டுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு