عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا، وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا».
[صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم: 2674]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:
'யாரொருவர் நேர்வழிக்கு அழைக்கிறாரோ அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவார், ஆனால் இது அவர்களுக்கான வெகுமதியைக் குறைக்காது. மேலும்,வழிகேட்டை நோக்கி அழைப்பவருக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்குச் சமமான பாவம் இருக்கும். ஆனால் இது அவர்களின் பாவத்தைக் குறைக்காது.'
[ஸஹீஹானது-சரியானது] - [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்] - [صحيح مسلم - 2674]
யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் சத்தியமும் நன்மையும் நிறைந்த ஒரு வழிக்கு மக்களை வழிப்படுத்துகிறோரோ அவருக்கு அந்த நல்லவிடயத்தை பின்பற்றி நடப்போருக்கு கிடைக்கும் நன்மை-கூலி- கிடைக்கும். இதனால் அந்த நல்ல விடயத்தைப் பின்பற்றி நடப்பவரின் நன்மையில் எதுவும் குறைக்கப்படமாட்டாது என நபியவர்கள் கூறினார்கள். யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் பாவமும் தவறும் அல்லாஹ் அனுமதிக்காத விடயங்கள் நிறைந்த அசத்திய வழியின் பால் அழைத்தால் அவரைப் பின்பற்றியவர்களுக்கு கிடைக்கும் பாவம் அவருக்கும் கிடைக்கும்.அதில் அவரைப்பின்பபற்றியவர்களின் பாவங்களில் ஏதும் குறைக்க்படமாட்டாது.