عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:
«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ» متفق عليه.
ولمسلم: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 2697]
المزيــد ...
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் :
'யார் எம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய விடயம் ஒன்றை உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கத்தக்கதாகும்' (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). மற்றுமொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : 'நம்முடைய விடயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது நிராகரிக்கப்படும்'.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 2697]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தராத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப் படுவதோடு அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெளிவு படுத்துகிறார்கள்.