عَنْ أُمِّ المُؤْمِنِينَ أُمِّ عَبْدِ اللَّهِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم:
«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ».
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ».
[صحيح] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية: 5]
المزيــد ...
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக முஃமின்களின் தாயான உம்மு அப்தில்லா ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் :
எமது மார்க்கத்தில் (தீனில்) அதில் இல்லாதவற்றை புதிதாக யார் உருவாக்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية - 5]
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தராத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப் படுவதோடு அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெளிவு படுத்துகிறார்கள்.