عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ:
حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ المَصْدُوقُ: «إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا، ثُمَّ يَكُونُ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يُرْسَلُ إلَيْهِ المَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ، وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ: بِكَتْبِ رِزْقِهِ، وَأَجَلِهِ، وَعَمَلِهِ، وَشَقِيٍّ أَوْ سَعِيدٍ؛ فَوَالَّذِي لَا إلَهَ غَيْرُهُ إنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا، وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إلَّا ذِرَاعٌ، فَيَسْبِقُ عَلَيْهِ الكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الجَنَّةِ فَيَدْخُلُهَا».
[صحيح] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية: 4]
المزيــد ...
அபூ அப்துர் ரஹ்மான் அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள் :
உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் : 'நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவரது படைப்பும் தனது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் விந்துவாக ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் இதே கால அளவிற்கு அட்டை போன்று இரத்தக்கட்டியாகவும், பின்னர் இதே கால அளவிற்கு ஒரு துண்டு சதையாகவும் இருக்கின்றது. பின்னர் அந்தக் கருவுக்கு ஒரு வானவர் அனுப்பப்பட்டு, அவர் ரூஹ் (உயிர்) ஊதுவார். அத்துடன் அவர் நான்கு விடயங்கள் குறித்து கட்டளையிடப்படுகின்றார். அதன் வாழ்வாதார அளவு, ஆயுட்காலம், செயற்பாடுகள், அவன் பாக்கியசாலியா? துர்ப்பாக்கியசாலியா? என்பவற்றை எழுதக் கட்டளை இடப்படுகின்றார். எவனையன்று வணக்கத்திற்குரியவர் எவருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையிலேயே உங்களில் ஒருவர் சுவர்க்கத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு முழம் அளவு தூரமே இருக்கின்ற வகையில் சுவர்க்க வாசியைப் போல் நடந்து கொள்வார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. ஆதலால் அவர் நரக வாசியைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்து, அதனால் அவர் நரகத்தில் நுழைகின்றார். இன்னும் உங்களில் ஒருவர் நரகத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு முழம் அளவு தூரமே இருக்கும் வகையில் நரக நெருப்புக்கு இரையாகும் விதத்தில் நடந்து கொள்கிறார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. இதனால் அவர் சுவர்க்கவாசியைப் போல் நடக்க ஆரம்பித்து அவர் சுவர்க்கத்தில் நுழைகின்றார்'.
[ஸஹீஹானது-சரியானது] - [رواه البخاري ومسلم] - [الأربعون النووية - 4]
இப்னு மஸ்ஊத் கூறினார்கள் : தனது வார்த்தையில் உண்மை பேசியவரும், அல்லாஹ் உண்மைப்படுத்தியவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எங்களுக்கு அறிவித்தார்கள்: உங்கள் ஒருவரின் படைப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதர் தனது மனைவியிடம் உறவு கொண்டால் அவனின் சிதரிய விந்தானது நாற்பது நாட்கள்; வயிற்றில்-விந்தாகவே கருவறையில்- ஒன்றிணைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்களில் இரத்தக்கட்டியாக மாறிவிடுகிறது.(இரண்டாம் நாட்பதுகளில்) அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்களில் மென்று சாப்பிடும் நிலையிலுள்ள சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது.( (மூன்றாம் நாற்பது நாற்களில்) அதன் பிறகு 120 நாட்கள் முடிவடைந்ததும் மலக்கு அனுப்பப்பட்டு அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. பின்னர் அவர் குறித்த நான்கு வார்த்தைகளை எழுதுமாறு கட்டளையிடப்படுவார். முதலாவது அவனின் வாழ்வாதாரம் குறித்ததாகும் அதாவது அவனின் ஆயுளில் அவன் பெற்றுக்கொள்ளும் இன்பங்களின் அளவாகும். அஜல் என்பது உலகில் அவர் தங்கியிருக்கும் காலத்தைக் குறிக்கும். அவனின் அமல் செயற்பாடு என்பது என்ன? அவன் ஒரு பாக்கியசாலியா? அல்லது துர்ப்பாக்கியசாலியா? பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆணையிட்டு கூறினார்கள்: ஒருவர் சுவர்க்கவாதிகளின் செயலில் ஈடுபடுவார். மனிதர்களுக்கு வெளிப்படையில் அவரின் செயல் நற்செயலாக இருக்கும். பூமியில் ஓரிடத்தில் ஒருவருக்கு குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கான தூரம் ஒரு முழம் அளவு இருப்பது போன்று அவர் சுவர்க்ததிற்குள் நுழைய ஒரு முழம் அளவு இடைவெளி காணப்படும். அந்நேரம் அவரின் விதி அவரை முந்தி அவர் நரகவாதிகளுக்குரிய செயலொன்றை செய்து விடுவார் இவ்வாறான ஒரு செயலின் மூலம் அவரின் ஆயுல் முடிவடைந்து விடும்.இதன்காரணமாக அவர் நரகம் நுழைவார். ஒருவர் தனது செயலில் மாறாது மிக உறுதியாக இருப்பது அவரின் செயல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையாகும். இன்னொரு மனிதரைப்பொருத்தவரை அவரும் நரகை அண்மிக்கும் வரையில் நரகவாதிகளின் செயலை செய்து கொண்டிருப்பார். நரகத்திற்கும் அவருக்குமிடையில் நிலத்தில் ஒரு முழம் அளவான தூரம் காணப்படும் அவ்வேளை அவரின் விதி முந்தி சுவர்க்கவாதிகளின் ஒருவரின் நற்செயலை செய்வதன் மூலம் சுவர்க்கம் நுழைந்திடுவார்.