عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ:
«إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا».
ولمسلم: « أولاهُنَّ بالتُراب».
[صحيح] - [متفق عليه] - [صحيح البخاري: 172]
المزيــد ...
அல்லாஹ்வின் துதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு தடவைகள் கழுவட்டும்'
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح البخاري - 172]
நாய் பாத்திரத்தில் வாய்விட்டால் அதனை ஏழு தடவைகள் கழுவுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கட்டளையிட்டார்கள். அதில் முதலாவது தடவை மண்ணால் தேய்த்து பின் நீரால் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது நாயின் அசுத்தம் மற்றும் பாதிப்பிலிருந்து முற்றிலும் சுத்தமானதாக பாத்திரம் மாறிவிடும்.