عَنْ عَمَّارِ بنِ ياسِرٍ رضي الله عنه قال:
بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ، فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا» ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً، ثُمَّ مَسَحَ الشِّمَالَ عَلَى الْيَمِينِ، وَظَاهِرَ كَفَّيْهِ وَوَجْهَهُ.
[صحيح] - [متفق عليه] - [صحيح مسلم: 368]
المزيــد ...
அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை ஒரு தேவைக்காக அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளிப்பு கடமையாகி) விட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நான் (குளிப்புக்கு தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன்.
(ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "தமது கையை பூமியில் ஓர் அடி அடித்து விட்டு,தமது வலக் கரத்தால் இடது கையையும் இரு முன்னங்கைகளையும் (இரு கைகளால்) தமது முகத்தையும் தடவி விட்டு, இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும் என்று கூறினார்கள்.
[ஸஹீஹானது-சரியானது] - [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது] - [صحيح مسلم - 368]
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சில தேவைகளின் நிமித்தம் அனுப்பி வைத்தார்கள். அவ்வேளை அவருக்கு உடலுறவின் மூலம் அல்லது இச்சையினால் விந்து வெளிப்பட்டு; அவருக்கு பெருந்தொடக்கு ஏற்பட்டது.(குளிப்பு கடமையாகியது) ஆகவே அருக்கு குளிப்பதற்கான நீர் கிடைக்கவில்லை. சிறு தொடக்குக்குக்குரிய சட்டம் பற்றி அறிந்திருந்த அவர் பெருந்தொடக்குக்கு தயம்மும் செய்வதன் சட்டம் குறித்து அவர் அறியாதிருந்தார். சிறு தொடக்குக்கு வுழுவின் சில உறுப்புக்களை மண்ணில் தடவிக்கொள்வது போன்று, -நீரனால் உடல் முழுவதையும் கழுவிக்கொள்வதை ஒப்பிட்:டு - ஜனாபத்திற்கான தயம்மும் உடல் முழுவதையும் மண்ணில் படுத்துவதாகும் என எண்ணி இந்த விடயத்தில் ஒரு முடிவை பெற்று உடல் முழுவதும் மண் படுமளவிற்கு மண்ணில் புரண்டு விட்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, தான் செய்தது சரியா அல்லது தவறா என்பதை தெரிந்து கொள்ள இந்த விடயம் சம்பந்தமாக குறிப்பிட்டார்கள். அதற்கு நபியவர்கள் ,சிறு தொடக்கு சிறு நீர் கழித்தல் பெருந்துடக்கு ஜனாபத் போன்ற இரு தொடக்குகளிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ளும் முறை பற்றி தெளிவு படுத்தினார்கள். இரு கைகளையும் மண்ணில் ஒரு முறை அடித்து விட்டு பின்னர் வலது கையால் இடது கையையும் இரு முன்னங்கைகளின் வெளிப்புறத்தையும் முகத்தையும் தடவிக்காட்டி தெளிவு படுத்தினார்கள்.