عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ:
«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ، وَغَلَبَةِ الْعَدُوِّ، وَشَمَاتَةِ الْأَعْدَاءِ».

[صحيح] - [رواه النسائي وأحمد] - [سنن النسائي: 5475]
المزيــد ...

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு துஆக் கேட்பார்கள் :
யா அல்லாஹ்! கடன் சுமையை விட்டும், எதிரியின் அடக்குமுறையை விட்டும் மேலும், எதிரிகளின் நகைப்பை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

[சரியானது] - [இமாம்களான நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது] - [ஸுனன் அந்நஸாஈ - 5475]

விளக்கம்

நபியவர்கள் இங்கு சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடியுள்ளார்கள் :
யா அல்லாஹ்! கடன் சுமையை (அது என்னை மிகைப்பதையும், அதன் கவலை மற்றும் சோதனைகளையும்) விட்டும் நான் (வேறு யாரிடமும் இல்லாமல்) உன்னிடம் (ஒதுங்கிப்) பாதுகாப்புத் தேடுகின்றேன். அவற்றைத் திருப்பிச் செலுத்திவிட உதவுமாறு நான் உன்னிடம் கேட்கின்றேன்.
இரண்டாவது : 'எதிரியின் அடக்குமுறையை விட்டும்' (அதாவது, எதிரி என்னை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அவனுடைய தொல்லைகளைத் தடுத்து, அவனை வெற்றிகொள்ள உதவுமாறு உன்னிடம் கேட்கின்றேன்.)
மூன்றாவது : 'எதிரிகளின் நகைப்பு' அதாவது, முஸ்லிம்களுக்கு ஏற்படும் சோதனைகள் மற்றும் துன்பங்களில் அவர்கள் மகிழ்ச்சியடைவது.

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. இறைவழிப்பாட்டை விட்டுத் திசைதிருப்பி, கவலைகளைக் கொண்டுவரும், கடன் போன்ற அனைத்தையும் விட்டுப் பாதுகாப்புத் தேடல்.
  2. பொதுவாகக் கடனில் பிரச்சனை இல்லை. மாறாக, யாருக்கு அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளதோ அதுவே பிரச்சனையாகும். இதுதான், 'கடன்சுமை' ஆகும்.
  3. ஏனையோரின் நகைப்புக்களுக்கும், குறை கூறல்களுக்கும் இலக்காக்கும் அம்சங்களை மனிதன் தவிர்க்க வேண்டும்.
  4. காபிர்களுக்கு முஸ்லிம்கள் மீதுள்ள விரோதத்தையும், முஃமின்களுக்கு சோதனைகள் ஏற்படும் போது அவர்கள் சந்தோசப்படுவதையும் உணர்த்துதல்.
  5. ஒரு மனிதனுக்கு ஏற்பட்டுள்ள சோதனையைப் பார்த்து எதிரிகள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, அந்த சோதனையை விட அவனுக்குப் பாரமாக இருக்கும்.
மொழிபெயர்ப்பைக் காண
மொழி: ஆங்கில மொழிபெயர்ப்பு உருது ஸ்பானிய மொழி மேலதிக விபரங்களுக்கு (48)
மேலதிக விபரங்களுக்கு