عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا أَصْبَحَ: «اللهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» وَإِذَا أَمْسَى قَالَ: «بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ، وَإِلَيْكَ النُّشُورُ» قَالَ: وَمَرَّةً أُخْرَى: «وَإِلَيْكَ الْمَصِيرُ».
[حسن] - [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وابن ماجه] - [السنن الكبرى للنسائي: 10323]
المزيــد ...
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபி (ஸல்) அவர்கள் காலையை அடைந்தால், இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் காலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் மாலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்.' மாலையை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் : 'யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் காலையையும் அடைந்தோம். உன்னைக் கொண்டே நாம் வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே நாம் மரணிப்போம். உன்னிடமே நாம் எழுப்பப்படுவோம்' மேலும் ஒரு தடவை, 'உன்னிடமே மீள்வோம்.' என்றும் கூறினார்கள்.
[ஹஸனானது-சிறந்தது] - [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وابن ماجه] - [السنن الكبرى للنسائي - 10323]
நபியவர்கள், பஜ்ர் உதயமாகி காலைப்பொழுதை அடைந்தால் இவ்வாறு கூறுவார்கள் :
(யா அல்லாஹ்! நாம் உன்னைக் கொண்டே) உனது பாதுகாப்பிற்கு உட்பட்டவர்களாக, உனது அருளால் அரவணைக்கப்பட்டவர்களாக, உன்னை நினைவு கூறுவதில் ஈடுபட்டவர்களாக, உனது பெயரைக் கொண்டு உதவி தேடியவர்களாக, உனது பேருபகாரத்தினால் உள்வாங்கப்பட்டவர்களாக, உனது பாதுகாப்பினாலும், சக்தியினாலும் இயங்குபவர்களாக (காலையை அடைந்தோம்.) (உன்னைக் கொண்டே மாலையை அடைந்தோம். உன்னைக் கொண்டே வாழ்கின்றோம். உன்னைக் கொண்டே மரணிப்போம்.) இது முந்திய வசனங்களைக் போன்ற அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும். அதேநேரம் அதனை மாலைநேரத்திற்கென மாற்றி, இவ்வாறு கூறவேண்டும் : யா அல்லாஹ்! உன்னைக் கொண்டே நாம் மாலையை அடைந்தோம். உயிர்ப்பிப்பவன் எனும் உனது பெயரைக் கொண்டே நாம் உயிர்வாழ்கின்றோம். மரணிக்கச் செய்பவன் எனும் உனது பெயர் கொண்டே நாம் மரணிக்கின்றோம். (ஒன்றுசேர்க்கப்படுவது உன்னிடமே) அதாவது, மரணத்திற்குப் பின்னர் எழுப்பப்படுவதும், ஒன்று சேர்ந்த பின்னர் பிரிந்து செல்வதும் உன்னிடமே. எமது நிலை, எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும் இவ்வாறே தொடர்ந்திருக்கும். அவனை விட்டு விலகியோ, அவனை விரோதித்தோ என்னால் இருக்க முடியாது.
அஸ்ருக்குப் பின்னர், அவர் மாலை நேரத்தில் நுழைந்தவுடன் இவ்வாறு கூறுவார் : இவ்வுலகில் மீள்வதும், மறுமையில் ஒதுங்குவதும் உன்னிடமே. நீயே என்னை உயிர்ப்பிக்கின்றாய்! நீயே என்னை மரணிக்கச் செய்கின்றாய்.