عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَكَلَ طَعَامًا فَقَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ».
[حسن] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي: 3458]
المزيــد ...
ஸஹ்ல் இப்னு முஆத் இப்னி அனஸ் அவர்கள் தனது தந்தை மூலமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கிறார்கள் :
உணவை சாப்பிடும் ஒருவர் (அவர் சாப்பிட்டதன் பின்) 'அல்ஹம்து லில்லாஹில்லதி அத்அமனி ஹாதா வரஸகனீஹி மின்கைரி ஹவ்லின் மின்னி வலா குவ்வா என்று கூறுகிறாரோ அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்'
(திக்ரின் கருத்து ) எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எந்தவித சக்தியும் முயற்சியுமின்றியே எனக்கு இதனை அருளினான்;)
[ஹஸனானது-சிறந்தது] - [رواه أبو داود والترمذي وابن ماجه وأحمد] - [سنن الترمذي - 3458]
உணவை உண்ணும் ஒருவர் அல்லாஹ்வை புகழவேண்டும் என நபியவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அல்லாஹ்வின் உதவியின்றி அந்த உணவை பெற்றுக்கொள்வதற்கோ அதனை சாப்பிடுவதற்கான சக்தியோ தனக்குக் கிடையாது என்று தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வை முழுமையாக புகழ்வதை இது குறிக்கிறது. இந்தப்பிரார்த்தனையை கூறுபவருக்கு அவர் முன்செய்த சிறிய பாவங்களுக்கான இறைமன்னிப்புக் கிடைக்கும் அதற்கு அவர் தகுதிபெறுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நற்;செய்தி கூறுகிறார்கள்.