عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: يُستجاب لأحدكم ما لم يَعْجَلْ: يقول: قد دعوت ربي، فلم يستجب لي». وفي رواية لمسلم: «لا يزال يُستجاب للعبد ما لم يَدْعُ بإثم، أو قطيعة رحم، ما لم يَسْتَعْجِلْ» قيل: يا رسول الله ما الاستعجال؟ قال: «يقول: قد دعوت، وقد دعوت، فلم أر يستجب لي، فَيَسْتَحْسِرُ عند ذلك ويَدَعُ الدعاء».
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

"நான் எனது இரட்சகனிடம் பிரார்த்தித்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாதவரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்" என அபூ ஹுரைறா ரழி அவர்கள்அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

முஸ்லிமின் அறிவிப்பில் "பாவம் செய்வதற்கோ அல்லது சொந்தபந்தத்தை துண்டித்து வாழ்வதற்கோ பிரார்த்தனை செய்யாமலும்,அவசரப்படாமலும் இருக்கும் காலமெல்லாம் அடியானின் பிரார்த்தனைக்கு தொடர்ந்தும் பதிலளிக்கப்படுகிறது." என நபி (ஸல்) அவர்கள் கூற, "அல்லாஹ்வின தூதரே அவசரப்படுதல் என்றால் என்ன?" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "பிரார்த்திக்கும் அடியான் நான் பல தடவைகள் பிரார்த்தனை செய்தேன் ஆனாலும் எனது பிரார்த்தனைக்கு பதில் கிடைத்ததாக நான் காணவில்லை" என கைசேதப்பட்டு பிரார்த்திப்பதை கைவிட்டு விடுவதாகும் எனக் கூறினார்கள்

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி குர்தி போர்த்துகீசியம் ஸ்வாஹிலி
மொழிபெயர்ப்பைக் காண
மேலதிக விபரங்களுக்கு