عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: "كَلِمَتَانِ خفيفتان على اللسان، ثقيلتان في الميزان، حبيبتان إلى الرحمن: سبحان الله وبحمده، سبحان الله العظيم".
[صحيح] - [متفق عليه]
المزيــد ...

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), ஸுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)".
ஸஹீஹானது-சரியானது - இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது

விளக்கம்

குறைந்த எழுத்துக்களுடைய, மறுமையில் தராசில் கனமான, "ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அழீம் ஆகிய இவ்விரு சொற்களையும் எமது இரட்சகன் அல்லாஹ் நேசிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அல்லாஹ்வைத் துதித்தல், குறைகள், அவனுக்குத் தகுதியில்லாதவற்றை விட்டும் அவனைத் தூய்மைப்படுத்தல், கண்ணியத்தைக் கொண்டு அவனை வர்ணிப்பதன் மூலம் இந்தத் தூய்மைப் படுத்தல் மேலும் வலியுறுத்தப்படுவதால் இதனை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

மொழிபெயர்ப்பு: ஆங்கில மொழிபெயர்ப்பு பிரஞ்சு ஸ்பானிய மொழி துருக்கிய மொழி உருது இந்தோனேஷியன் போஸ்னியன் ரஷியன் வங்காள மொழி சீன மொழி பாரசீக மொழி தகாலூக் ஹிந்தி மொழி வியட்நாம் மொழி சிங்கள மொழி உய்குர் மொழி குர்தி ஹவுஸா போர்த்துகீசியம் மலயாளம் தெலுங்கு ஸ்வாஹிலி பர்மா தாய்லாந்து ஜெர்மன் ஜப்பான் بشتو الأسامية الألبانية السويدية الأمهرية الهولندية الغوجاراتية الدرية
மொழிபெயர்ப்பைக் காண

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  1. அதற்கென சிரமத்தை எடுக்காமல் எதுகை மோனை பயன்படுத்த முடியும்.
  2. அல்லாஹ்வை நினைவுகூரும் இவ்விரு வார்த்தைகளின் சிறப்புகள்.
  3. அல்லாஹ்வின் தகுதிக்கேற்ப அவனுக்கு நேசம் எனும் பண்பு இருப்பதாக உறுதிகொள்ளல்.
  4. ரஹ்மான் எனும் பெயரை அல்லாஹ்வுக்கு இருப்பதாக உறுதி செய்தல்.
  5. குறைந்த சொற்களையும், அதிக நன்மைகளையும் கொண்ட இந்த திக்ரை ஆர்வமூட்டல்.
  6. அல்லாஹ்வை நினைவுகூர்தலில் பல தராதரங்கள் உண்டு, அவற்றிற்கேற்ப நன்மைகளும் வேறுபடும்.
  7. மறுமையில் நன்மை, தீமைகளை நிறுக்கும் தராசு உள்ளதென உறுதிப்படுத்தல்.
  8. பிறருக்கு ஒரு நன்மையை ஆர்வமூட்டும் போது அதனால் கிடைக்கும் சில பயன்பாடுகளையும் கூறுவது விரும்பத்தக்கது.
மேலதிக விபரங்களுக்கு